பக்கம்:நேசம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130லா. ச. ராமாமிர்தம்


மில்லை. ஆனால் வேடுவ குலமாதலின் அவளும் போர் வழி களில் வல்லுநள். தப்ப வழிகள் தெரியாமலிருக்குமா? அவள் கழுத்தில் கறுப்பு மணி மாலையில் தொங்கிய குட்டிக் கொப்பி யைத் திறந்தாலே ஒரு படையையே வீழ்த்த வல்ல மயக்க மருந்து இருக்கலாம். ஏனெனில், அரண்மனையின் மேற்கு வாசலில் காவலர் இருவர் நினைவிழந்து கிடந்தனர். மூன் றாமவன் முதுகில் ஒரு கத்தி, பிடிவதை அழுந்தியிருந்தது. இன்னொருவனின் விலாசம் அடியோடு தெரியவில்லை. அன்றைய ராக் அனைவருமே அரசகுமாரன் கட்டளை, சிரச்சேதமாயினர். அகப்பட்டவர்மேல் அதிகாரம் பழி தீர்த்துக்கொள்ளலாம். அத்துடன் சரி. தப்பிப் போகிற வளைப் பிடிக்க முடியவில்லை. ராணி பெருமூச்சுவிட்டாள். கூந்தலில் நரைமயிர் ஒன் றிரண்டு கருமைக்கு மீண்டது. சாத்தியமா? கேட்காதீர்கள், இது மாயா வினோதக் கதை. இப்படி விழுந்துவிட்ட வரியைக் கலைக்காதீர்கள். இளவரசியின் நிலை கண்டு பயப்படுவதா? பரிதாபப் படுவதா? மது, மாது, வேட்டை, கொடுமை மறதியே உன்னை அடைய வழி என்ன? மனமே உன் உலைக்கு மூடியே கிடை யாதா? அதற்கும் வழி உன்னையேதான் கேட்க வேண்டுமா? அனுபவிக்க அவமானங்கள் இன்னும் என்னென்ன? -அரசனிடம் குமாரன் வந்தான். "தந்தையே, நீங்களோ தவத்தில் இறங்கிவிட்டீர்கள். எனக்கும் வயதாகிக்கொண் டிருக்கிறது. பொழுதும் போகவில்லை. அரச நிர்வாகத்தை என்னிடம் ஒப்படையுங்களேன்! நானும் பழகவேண்டியவன் தானே.” ராஜன், மகனைச் சிந்தித்தார். ஆஜானுபாகு, அழகன். கொடுத்துவிட வேண்டியதுதானே! நான் என்ன நித்தியமா? நானில்லாமல், மக்கள் என்ன ஆவர் என்ற நினைப்பே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/136&oldid=1403588" இலிருந்து மீள்விக்கப்பட்டது