பக்கம்:நேசம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி131


அகந்தைதானே! எத்தனையோ சூரியர், சந்திரர், நேற்று முளைத்த சூரியனேதான் இன்றும் வந்தான் என்று என்ன நிச்சயம்? சூரியனே விட்டிற்பூச்சியெனில் நாம் யார்? நடப்பது நடந்தே தீரும். மகுடத்தைக் கழற்றி மகன் தலையில் வைத்தார். கிரீடம் நெற்றிக்கும் தாழச் சரிந்து பார்வையை மறைத்தது. பிள்ளைக்குப் பின்னால் பிரியாவிடையாக நின்ற ராணி, "பரவாயில்லை, உங்களுக்குத் துணி தைத்தோ, கொடுத்தோ சரிபண்ணிக்கொள்ளலாம் என அவசரமாக மறித்தாள். முடி பொருந்தவில்லை என்று மன்னன் மனம் மாறிவிட்டால்? என்று அவள் கவலை. அந்த நிமிடம், வருடங்கள் உதிர்ந்து, அரசி அழகில் பொலிந்தாள் என்றே கூறலாம். இடையில் முழங்கால்வரை துண்டுடன், ராஜா நாட்டை விட்டு அகன்று காட்டை அடைந்தார். ராஜ ரிஷி, இப்போ ரிஷிராஜ் ஆனார். உருவங்கள், உணர்ச்சிகள் தடவாளங்கள் தாண்டி உண்டு, இல்லை நிலைகள், யூகங்கள் தாண்டி நாமாக்களின் எல்லைகள் தாண்டி இப்போது அவரை நிரம்பி வழிந்தது கருணா பாவம் ஒன்றுதான் ஏரியின் அமைதி மனதில் அதில் அவ்வப்போது மீன்களின் - துள்ளல்கள் காற்றின் பெருமூச்சில் சிற்றலைகளின் விதிர் விதிப்பு வானின்று கழன்று உதிர்ந்த ஒன்றிரண்டு நட்சத்திரங் களின் சுழிப்பு தவிர்க்க முடியாதவை மனமே உன்னை முற்றிலும் வெல்வது இல்லை. மனமே உனக்கு மரணம் இல்லை முத்தியென்றும் கடவுள் என்றும் துறவு என்றும் கனவுகள் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/137&oldid=1403589" இலிருந்து மீள்விக்கப்பட்டது