பக்கம்:நேசம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி133


'இல்லை. உங்களிடம் ஒரு புத்தகம் இருக்கிறதாம் அம்மா வாங்கி வரச் சொன்னாள். ரிஷி வலது கையைத் திறந்தார். உள்ளங்கையில் ஒரு புத்தகம் இருந்தது. குட்டிப் புத்தகம். 'ஆம் ஆம் அதுதான்-முழுவதாக முக்கியமானதை அமுக்கிவிட்டு ஏமாற்றிவிட்டால் ஆகிவிட்டதா?’’ அவர் முகத்தில் லேசாக விசனம் படலம் ஆடிற்றோ? இந்த ஓயாத அதிருப்தியேதான் மனிதகுலத்தின் முடிவா? இதனால்தான் பிறவிக்கு விடிவே கிடையாதா? புத்தகம் அவர் கையினின்று நழுவி ஒமத்துக்கு ஆஹ"தி ஆயிற்று. ராஜனுக்கு மூண்ட சீற்றம் தலைகால் தெரியவில்லை. ஆண் மண் தெரியா இந்த அரச கோபம் முட்டுக் கொடுக்கா விடின், மாயா வினோதக் கதைகள், சரித்திரக் கதைகன் பாதியிலேயே குப்புறக் கவிழ வேண்டியதுதான். சதக்! நின்றவிடத்திலிருந்து எறிந்த கத்தி விலாவில் இறங்கி முதுகுப் புறமாக வெளிவந்த ஆச்சரியமும் அதிர்ச்சி யும்தான். முன் வலி பின்னால். வலி என்பது அவரவர் அனுபவம், மனநிலை, சஹிப்பைப் பொறுத்தபடி. ஆனால் அவர் கண்களில் தெரிந்தது மாபெரும் விசனம்தான். "ஆண்டவனே! என் மகன் தெரியாமல் செய்துவிட்டான் அவனை மன்னித்துவிடு!’ என்கிற மாதிரி. ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. வருடக்கணக்கில் தன் ஆலிங்கனத்தில் அவரைக் குழைத்து விழுங்கிக்கொண் டிருக்கும் மெளனத்தில் நாக்கு எந்நாளோ செயலிழந்து விட்டது. - ஆனால் அரசன் கண்கள் பயத்தில் சுழன்றன. அவன் கண்டது வேறு. அந்தப் பயத்தில் போதை சட்டென அவனை விட்டால் குதிரைமீது அப்படியே தாவி பின்னால் யாரோ அவனைத் துரத்துவதுபோல் அதை விரட்டு விரட்டென விரட்டி அரண்மனையில் அடைந்து படுக்கையில் மல்லாக்க விழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/139&oldid=1403591" இலிருந்து மீள்விக்கப்பட்டது