பக்கம்:நேசம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134லா. ச. ராமாமிர்தம்


'போன காரியம் என்ன? மகளே உனக்கென்ன வந்தது' 'அம்மா அ ப் பா என்னெதிரே உருமாறுவதைக் கண்டேன்! " "புரியும்படி சொல்லேன்' திரை ஒட்டுவாரொட்டி அதனாலேயே அவள் குரல் சற்றுப் பொறுமை இழந்தது. அரசன் கண்ட காr அவன் கண்முன் திரும்பவும் நின்றது. கண்களைப் பொத்திக்கொண்டான். மறையவில்லை. "அப்பா, முகம், உடல் எல்லாம் நிமிஷத்தில் மாறிப் போச்சு. அறையில் கோவணம்கூட இல்லாமல் ஒரு ஆள். தாடியும் சடையும் பூமியில் புரண்டன. நகங்கள் கூரியக் கத்திகள், உடல் குளி கண்டு எந்த நாளோ? கண்களுள் நெருப்புச் சக்கரங்கள். தரையிலிருந்து ஒரு புல்லைப் பிடுங்கி இரண்டு துண்டுகளாகக் கிள்ளி என்மேல் எறிந்தான். இதுவரை நான் அறிந்திராத பயங்கண்டு ஓடிவந்து விட்டேன். ராணிக்கு முகம் வெளுத்தது 'மகனே! அது ஒரு பாஷை மகன் விவரித்த ஆளை அவளுக்குத் தெரியுமே! "மகனே, பெரிய இடத்துப் பகையைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டாப்!” "என்னை ஏன் சொல்கிறீர்கள் நீங்கள்தானே என்னை அனுப்பினர்கள்? உங்களால்தானே, நீங்கள் இப்பொழுது பயமுறுத்தும் நிலை." 'சரி, பெரிய இடத்துப் பகையைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டோம் ராணிக்கு அலுப்பாயிருந்தது. இந்த வார்த்தைகளின் நுட்பத்தில் என்ன அக்குசோ? என்ன லாபம் அதனால் கண்டது? 'உன்னைச் சுற்றிக் காவலை இரட்டிப்பாக்கு. நீயும் எப்பவும் ஆயுதபாணியாகவே இரு. எச்சரிக்கை: எச்சரிக்கை: இதுவே இப்போதிலிருந்து உன் மூச்சின் ஜபமாக இருக்கட்டும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/140&oldid=1403592" இலிருந்து மீள்விக்கப்பட்டது