பக்கம்:நேசம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள ஸ்நேகிதிக்கு149


குழந்தைகளும் பெரிதாகிவிட்டன. எல்லோரும் அம்மா ஜாடை அம்மா கட்சி. தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு விட்டாள். ஸுனோவுக்குத் தெரியும், சப்பாத்தியில் எந்தப் பக்கம் நெய் தடவி இருக்கிறது என்று. பெண்கள் எப்பவுமே ஆண்களைவிட நாள் ஏற ஏற யதார்த்திகள். நான் நாயும் சீந்தாத காய்ந்த ரொட்டித் துண்டு. ஆனால் யார் மேலும் தப்பில்லை. பிறகு அன்று ஆஸ்பத்திரி வில் உன்னைப் பார்த்ததுதான். அடுத்த முறை. ஆனால் இப்பொழுது குங்கிலியம் குபிரிட்டுவிட்டது. எரிகிறேன். நெஞ்சு மணக்கிறது. உடலெல்லாம் உள்ளே பரிமளம் புகைகிறது. அமலி எங்கிருந்து எனக்குள் திடீரென்று இத்தனை ஈரம்? எண்ணை? உண்மையில் நான் காயவில்லையா? ஆனால் ஒன்று. உடலுறவினால் நமக்கிணிப் பயனில்லை. ரிஷிபஞ்சமி முழிக்காவிட்டாலும் நீ தாண்டியிருப்பாய், அன்று இழந்த சந்தர்ப்பத்தை இன்று மீட்க முடியும் என்று நம்பிக்கை என்னுள்ளே திரி வைத்துவிட்டது. இந்த நம்பிக்கையில் கட்டில் கிடையாது பாயும் கிடையாது. தரை யில் விரிக்கத் துண்டும் கிடையாது. வெறும் தரை. கட்டாந் தரை, கீழே பூமி. மேலே ஆகாசம், வேறென்ன வேண்டும் இனி நமக்கு? காதல் என்பது இதயத்தில் தானே ஏற்றிக்கொண்ட அகல் சுடரோ? ஒரு முடிவுக்கு வந்துதான் இதை எழுதுகிறேன். இன்று என்ன கிழமை? இன்று எட்டாம் நாள் வருகிற வியாழன் மாலை ஐந்திலிருந்து பழவந்தாங்கல் ஸ்டேஷனில் தாம்பரம் திக்கில் உனக்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். நீ ஒரு பெட்டிகூட எடுத்து வரவேண்டாம். உன் நர்ஸ் யூனிபாரம் போதும். சட்டென்று உன்னை அடையாளம் கண்டுபிடித்துக்கொள்ள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/155&oldid=1403607" இலிருந்து மீள்விக்கப்பட்டது