பக்கம்:நேசம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152லா. ச. ராமாமிர்தம்


அசரீரி கேட்டது தானோ என்னவோ, அவர் முகத்தில் சஞ்சலம் படிப்படியாக அடங்குகிறது. முகம் தெளிவடை வதைத் தெள்ளெனக் காணமுடிகிறது. 'அம்பி, நம்மைப் பயமுறுத்துவதே நம் நிழல்கள்தான்! நீ பயப்படாதே-’ என் முதுகைத் தட்டுகிறார். என்னுள் எலும்பு கதகதப்பாக உருகுகிறது. அவர் முகத்தில் புன்னகை படர்கிறது. ஆனால் புன்னகையா அது? மார்பில் தழும்பை மூடிமறைக்கும் பதக்கம்போலும் புன்னகை-ஏதோ ஒரு தகை! சரி வா, உள்ளே போகலாம்." வீட்டைச் சுற்றித் தாழ்வாரம் தாண்டி வாசல் வெளித் தாழ்வாரத்தில், சோபாக்கள் நாற்காலி வகைச் சாமான்கள் மண்டிக் கிடக்கின்றன. அவைகளின் செறிவு, வாசலுக்கு வாசல், ஜன்னலுக்கு ஜன்னல் திரைகள் சேர்ந்து வீட்டிலேயே எப்பவும் ஒரு இருட்டு, மிருது நிழல் இருட்டென்று சொல்ல மனமில்லை.

  • * t jfrayrri * °

மாடியில், படிககடடின திருப்பத்தில் ஒரு சிலை. பாற்கடலில் லக்ஷ்மி எழுந்தாள். . சிவன் விரித்த சடைமேல் ஆகாச கங்கை இறங்கினாள். யாக குண்டத்தினின்று கிருஷ்ணை எழுந்தாள். இவை கதைகள், இது நான் கண்டது. நெற்றியில் ஜிகினாப் பொட்டு, மாடிச் சுவரும் அடங்கிய குளோப் வெளிச்சத்தில் சுடர் விட்டது. இப்போக்கூட உடல் பரபரக்கிறது. அந்தக் காட்சி நினைவில் எழுகையில், 'நான் ஒரு நாத அதிர்வு.” இந்த பாஷை என்னுடையது அல்ல. ஆனால் இது: என்னுள் எங்கே ஒளிந்துகொண்டிருந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/158&oldid=1403610" இலிருந்து மீள்விக்கப்பட்டது