பக்கம்:நேசம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா165


வாழை இலையில் பிஸிவேளாஹல்ளி அன்னாவை ஒரு கரண்டி-ஆவி பறக்க-பின்னாலேயே இன்னொரு கரண்டிஅன்னம் ஒரு தினுசான பக்குவமான இளகலில் கரண்டிவி லிருந்து திரண்டு விழுகையில் ஆஹா அதற்குப் பின்னர் வேணது பார்ட்டிகள்,-மூஞ்சியில் அடித் தா ற் .ே பால் இதற்கும் கூடுதலான ஐட்டங்களுடன் அலுத்துப்போகும் வரை சாப்பிட்டாச்சு. ஆனால் இந்த ருசி பூரா இந்த வேளை பில் ருசிக்கு ஈடாமோ? அன்றைய சாப்பாட்டு விவரங்கள் இன்னமும் நினைவில் எப்படி தீர்க்கமாக திலைத்து நிற்கின்றன: இது வெறும் ஒரு சாப்பாட்டு ராமனின் பசித்த வேளையின் பழங்கணக்கு அல்ல சாப்பாடு மூலை வேளை எப்படி பரிணமிக்கிறது என்று சொல்ல முயல்கிறேன். மானேஜர் சாம்பார் சாதத்தை ஒரு கவளம் வழித்து வாயில் போட்டுக்கொண்டு சூடு தாங்காமல் தாடைக்குத் தாடை தள்ளித் தவிக்கிறார். "ஒய் ராயரே இத்தனை வித்தையை இத்தனை நாள் எங்கே ஐயா பதுக்கி வெச்சிருந்தீர்?’’’ "இங்கே எல்லாம் எங்கே சான்ஸ் சுவாமி? வெறுக் இட்லி சாம்பார் மிளகாயைத் தீட்டி வெச்ச சட்னியோடு சரி: அப்பாசாமி அய்யரிடம் நேரே கரண்டி அடி வாங்கினவன் தான். ஆனால் வேளை இங்கே தானே எனக்குப் பிழைப்புப் போட்டிருக்கு கத்த வித்தையை மறக்காம இருக்க, அடங்களைப் போலவா அபூர்வமா இருக்கேளே? வெளியூரி விருந்து அழைப்பு வந்தால் உண்டு. எனக்கு ஒரு குறை. பார்ட்டிக்கு ஐஸ்கிரீம் பண்ணமுடியவியேன்னு.' 'ஏன் பண்றதுதானே? உம் கையை யார் பிடிச்சா?’’ 'மெஷின் இல்லை, இன்னும் ஒண்னு ரெண்டு ஐட்டங் கள் கூடத் தேவை. ப்ரிஜ், க்ரைண்டர்-பாங்க் ஒத்தாசை மண்ணினால் ஹோட்டலைக் கொஞ்சம் விரிவுபண்ணுவேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/171&oldid=1403624" இலிருந்து மீள்விக்கப்பட்டது