பக்கம்:நேசம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168லா. ச. ராமாமிர்தம்


மானேஜர் ஏதேதோ மொன மொனத்துக்கொண்டே நடக்கிறார். ஏதேதோ உறுமல்கள், குமுறல்கள் உருப்படி யாக வார்த்தைகள் ஏதும் புரியவில்லை. பொட்டென நடுவழியில் நிற்கிறார். 'அம்பி, அப்போதைக்கு நீ சொன்னதைக் கேட்க வில்லை. வயத்தைப் புரட்டறது.” பாதை ஒரமாய் ஒதுங்கக்கூடக் குமட்டல் நேரம் கொடுக்கவில்லை. நடுவழியிலேயே வாந்தி அவர் தலையைப் பிடித்துக் கொள்கிறேன். சந்திரன் வானில் முழு ஆதிக்கத்தில் கிரிக்கிறான். இங்கே நடுவழியில், நடுநிசியில் வாய் கொப்புளிக்கக் கூடத் தண்ணீருக்கு வழியில்லை. பாலா கோபம் நியாயமான கோபம்தான். அடிப்படைக் காரணம் நான்தானே? எனக்குப் பார்ட்டி இல்லாவிட்டால் வாழாதா? எதையோ சாக்கிட்டு ஏதோ ஒண்னு பாட்டி கதை ஒண்னு ஞாபகம் வரது கொலையுண்டவன் யாரோ சந்திரனைச் சாட்சிவைத்துவிட்டுப் போனானாம். இந்தப் பாவத்துக்கோ பழிக்கோ சந்திரனே சாட்சி. 'அம்பி, தலையை ரொம்பச் சுத்தறது. பிரஷர் ஏர்றதுன்னு நினைக்கிறேன்.” எனக்குத் தொண்டையை அடைத்தது. "லார், நாம் வீட்டுக்கே வந்தாச்சு. ” மோனச் செய்கையில் கையை உயரத் தூக்குகிறார். ஆம், அது என்ன? நெருப்புப் பிழம்புபோலும் வீட்டுள்ளிருந்து தம்பூரின் உருகோசை புறப்பாடு, புறப்பட்டு எங்கள்மேல் இறங்கு கிறது. இந்த வீட்டுக்கு வந்தது முதல் முதன் முதலாக இப்போதுதான் கேட்கிறேன். மானேஜர் முகத்தில் திகில். இது ஒரு புது திகில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/174&oldid=1403627" இலிருந்து மீள்விக்கப்பட்டது