பக்கம்:நேசம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182லா. ச. ராமாமிர்தம்


சிகிச்சை உடனே செய்துகொள்ள வேண்டும். இங்கே வசதியில்லை. வேலூர்-அல்லது மெட்றாஸ்-" "என்ன ஸ்டேஜ் என்று நான் கேட்கப் போவதில்லை." 'நான் சொல்லப் போவதுமில்லை." 'நல்ல ஜோக் சரி டாக்டர் போயிட்டு வரேன், உங்கள் பில்லை இப்பவே செட்டில் பண்றேன். இதோ கையெழுத்தோடு செக். உங்கள் பாக்கியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்." ' என்ன சார் அவசரம்?’’ "'உங்களுக்கு இல்லை, எனக்கு வந்துவிட்டது. சிகிச்சை ஆரம்பிப்பது பற்றி இன்னும் இரண்டு நாளில் சொல் 'அடுத்த நாள் பாங்கில் பதினொரு மணி ஆகியும் மானேஜர் வரவில்லை. கேஷ் எடுக்கனுமே முத்தையா வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறான். வாசற் கதவு திறந்தபடி மானேஜர் படுக்கையில் இன்னும் தூங்கிக்கொண்டிருக் கிறார். கட்டில் அருகே மேஜைமேல்; உனக்கு ஒரு கவருடன் எனக்குக் கடிதம் பாங்குக்கு ஒரு கடிதம் துரக்க மாத்திரைகள் சீசா ஒன்று காலியாக. டாக்டர் பெண் அவள் அறையில் தூங்குகிறாள். இன்னும் சொல்ல என்ன இருக்கு போலீஸ் ஒத்துழைப்பு, ஊர் ஒத்துழைப்பு சேர்ந்து கேஸ் பதிவாகாமல், அமுக்கிட் டோம். சுருக்க தகனம் பண்ணியாச்சு. பெரிய மனுஷன் நானும் உடந்தைதான். உன்னிடம் சொல்வதற்கென்ன? டெத் சர்டிபிகெட் என் பொறுப்புதானே!" மாலை முத்தையாவின் தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறேன். கவலையேற்றம் ஓடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/188&oldid=1403642" இலிருந்து மீள்விக்கப்பட்டது