பக்கம்:நேசம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56லா. ச. ராமாமிர்தம்


இப்போதுதான் அவர் முகத்தை ஊன்றிக் கவனித்தேன். குரல் எங்கோ கேட்ட மாதிரி, மண்டையோட்டுக்குள் தேன் கூட்டுள் லட்சோப லட்ச அறைகளுள் எதோ ஒரு அறையில் மணி அடித்தது. என்னையும் அறியாது நெற்றிப்பொட்டைத் தேய்த்துக் கொண்டேன். 'நீங்கள்-நீங்கள்-தீர்த்தராமன் இல்லையோ?” அவர் முகம் மிரண்டு-உள்வாங்கிற்று. s s @rrtŕ tirriř?** - என்னைத் தெரியல்லியா? மீர்சாப்பேட்டை-பெசன்ட் ரோடு. உங்கள் வீட்டு எண் 13. நான் எதிர் வீடு-87. நான் யக்ஞராமன். நீங்கள் தீர்த்தராமன். அதுவே நம் குடும்பங் களுக்கிடையே வேடிக்கைப் பேச்சில்லையா? அப்போ இவள் பங்கஜம் இல்லையா?” ஏன் மனுஷன் முகத்தில் அடையாளத்தின் சந்தோஷம் இல்லை? சந்தோஷம் போகட்டும்; ஏன் அடையாளம்கூட இல்லை? அவள் ஏற்கெனவே கோதுமையின் பொன்னிறம். முகம் இப்போ தகதகத்தது. என் திகைப்புக்குச் சமாதானமாக, அப்பாவுக்குக் கண் தேரியாது. ஒரு கண் ஆபரேஷன் பண்ணி ரெண்டு கண்ணும் போயிடுத்து’’ என்றாள். இப்போ புரிந்தது அந்த உறைந்த புன்னகை உறைவின் அசடு. ஆம்; அப்பவே கூழாங்கல் கண்ணாடி, சரி பங்கஜம், போவோமா?" எனக்கு சுருக்கென்றது. தீர்த்தராமன், நம் சந்திப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை." 'சரிஞ்சபின் தெரிஞ்சவா கண்ணில்பட கஷ்டமாத் தானிருக்கு.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/62&oldid=1403492" இலிருந்து மீள்விக்கப்பட்டது