பக்கம்:நேசம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால்61


இன்னும் கண்டுபிடிக்கவில்லையே! அஞ்சு அக்கா தங்கை நடுவே நான் ஒரே பிள்ளை. சின்ன வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன். பூர்வீகமும் இல்லை. வேறு விளக்கம் தேவையில்லை என் கடமையைச் செலுத்துவதற்குள் அவள் பூட்டிக்கொண்டு வந்ததே ஒண்னு ரெண்டு குடும்பத்தில் பறிபோயிடுத்து அவளுக்கும் சொல்லும்படியாக இல்லை. அப்படி நான் எடுத்துக்கொண்டதற்கும் அவள் எதிர் பேச வில்லை. அவள் மனசை சுருக்க அறியமுடியாது. அழுத்தப் பேர்வழி. சந்தோஷமோ கஷ்டமோ, வெளியே காட்டி, கொள்ளமாட்டாள். எண்ணங்களைப் பதுக்கிவிடுவாள், மாலை வீடு திரும்பியதும், அவள் சமையலறையில் காப்பி கலந்துகொண்டிருக்கையில் பின்பக்கமாக நான் வந்து அவள் கழுத்தில் போட்டபோது அவள் சொன்னது என்ன தெரியுமா? சத்தியமா சொல்றேன். மாமா மாமி இங்கிருத் தால், இது தெரிஞ்சாலே எவ்வளவு சந்தோஷப்படுவா? ஆனால் என் பெண்டாட்டி நகைமேல் ஆசையுள்ள பொம்மனாட்டி என்றாலும், போட்டுக்கொண்டு புழங்க மனசு இல்லாதவள். தொட்டுத் தொட்டுப் பார்த்து, பத்திரம் பண்ணிவிடுவாள். நான் ஆரம்பத்தில் கேலி செய்தபோது, 'நானே பூட்டிண்டு தேய்ச்சுடனுமா? நமக்கு ஒரு பெண் இருக்கே என்றாள். அவளே ஒரு போக்கு திடீரென்று ஒரு நாள் ஒரே அலங்ருதையாகக் காட்சி அளிப்பாள். அடுத்த வேளையே, ஒன்றுமேயில்லாமல், கையில் வளையல்கூட இல்லாமல், வெறும் ஒரு சுங்கடி, ஒரு வெள்ளை ரவிக்கை, வகிடுகூடக் கலைத்து மேலுக்கு அழுந்தக் கூந்ைைல வாரிக் கொண்டையிட்டு-மொழு மொழு என்று இருப்பாள். அதுவும் அவளுக்கு அழகுதான்.” உள்ளொளியில் அவர் முகம் பொலிவுற்றது. அவர் வர்ணித்த மங்களத்தை நான் பங்கஜத்திடம் பார்த்துக் கோண்டிருந்தேன். அவரோ தன் கண்ணுள் மங்களத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/67&oldid=1403497" இலிருந்து மீள்விக்கப்பட்டது