பக்கம்:நேசம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2லா. ச. ராமாமிர்தம்


2 லா, ச. ராமாமிர்தம் கெவிடாஸ்கோப் மாறிற்று. வெள்ளிக் கவசமிட்ட இரு பாத கமலங்களின் மேலும், சிதறி, அடரச் சிந்திய அர்ச்சனைக் குங்குமம் விழிகள் துளும்பின. 'ஏன் அழறேள்? உடம்பை என்ன பண்ணறது? வாயைத் திறந்து சொல்லுங்களேன்! சொன்னால்தானே தெரியும்: ஆனால் பேசமாட்டேள், மெளனவிரதம் வேறே!’ எதிர் நாயனம் பிள்ளையாண்டான் குரல்: "குடும்பத் தில் இருந்துகொண்டே, பழக்கப்படாத வயசில், உப்பில்லாப் பட்டினி மெளன விரதம், இதெல்லாம் என்ன ஊர் மேச்சவா? இப்படியெல்லாம் பண்ணினால், பாதை வகுத்து விடுமா? ராஜாங்கம் நடத்திக்கொண்டே ரிஷிவேஷம்: ராஜரிஷி!' அவன் தாயின் சிரிப்பு "அவுட் வெடித்தது. ‘'நீ சொல்றது. வாஸ்தவந்தாண்டா? நவராத்திரி சமயம், இந்தப் பக்கம் இசைகேடா நாலு மாமிகள் வந்தால், உன் ஆத்துக்காரருக்கு என்ன உடம்பு என்று கேட்கும்படிதானே இருக்கு, பாரேன், வேஷத்தை கண்ணுக்குக் கட்டு, காதில் பஞ்சு தாடி வேறே...' "அதெல்லாம் புலனடக்கம் அம்மா, புலனடக்கம். மஹாத்மா காந்தி எப்பவும் தன்னெதிரே மூன்று குரங்குப் பொம்மைகள் வைத்திருந்தாராம் 'நல்லதல்லது பார்க்க மாட்டோம்," "நல்லதல்லது பேசமாட்டோம், "நல்லது அல்லது கேட்கமாட்டோம்." அப்பாவிடம் மூன்றும் ஒருமுக ஆவாஹனம்.” 'உத்தியோகம் பண்ணற மனுஷன் நாலுபேர் தன்னை வெறுங்கையோடு இல்லாமல், பண்டத்தோடு வந்து பார்க்கிற நாளில் மெனக்கெட்டு வீவைப் போட்டுவிட்டு, வீட்டில் இதுமாதிரிக் கூத்தடிக்கிறது. இவருக்குத்தான் பொருந்தும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/8&oldid=1403432" இலிருந்து மீள்விக்கப்பட்டது