பக்கம்:நேசம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா! 'ஈ ஜகழலோ திக் கெவரம்மா..." சபை "கும்". இன்று வகையான கூட்டம். அவர்களிடையே ஒரு பழ க் கம். இன்ன ராகம் ஆலாபனை, அதையொட்டி, இன்ன உருப்படி என்கிற முன் உடன்பாடோ, ஒத்திகையோ கிடையா. மேலும், ஆலாபனை செய்தவன்தான் கீர்த்தனையை எடுப்பது என்பதும் இல்லை. இருவருள், யாரும் எடுத்த பின் இருவரும் ஒருமித்து விடுவார் கள். ஆலந்துர் சகோதரர்களுக்குப் பின், விஷய ஞானத் துடன் ஜனரஞ்சகத்துக்கு இவர்கள். பேர்தான் சமீபத்தில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. மண்டைக்கனம் நடுவில் ஏறாமல் இருந்தால், பரம்பரையாகக் காப்பாற்றி வருகிற லங்கீதந்தான். ஜாம்பவான்களின் சிரக்கம்பம், அன்று, ரீதிகெளளையை ஆலாபனைக்கு எடுத்துக் கொண்டதென்னவோ சபேசன்தான். சாமா வழக்கமாக ஆங்காங்கே ஒட்டிக்கொண்டான், பிரிந்தான், தொட்டுக் கொண்டான் ஒட்டக் கலந்தான். சமயங்களில், ஆலாபனையோ, உருப்படியோ சேர்ந்து பாடாமல், துண்டாகத் தனித்து இயங்குவதும் உண்டு. அதிலும் ஒரு சமாளி" இருக்கிறதே! சவால் அல்ல. மணிக் கட்டில் கிளியை ஏந்தி, அதன் பேச்சைக் கேட்பதுபோல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/85&oldid=799103" இலிருந்து மீள்விக்கப்பட்டது