பக்கம்:நேசம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகை3

 ஏற்கெனவே படும் அவஸ்தை போதாதென்று இந்தச் சித்திரவதை வேறே. பாம்புக்கு மணிக்கட்டைக் காட்டிச் சீண்டுவதுபோல, தினமும் ஒருவேளை, இந்தக் கூப்பாட்டைச் சடங்காக நடத்துகிறார்கள். இத்தனைக்கும்தான் தன் இருப்பிடம் மாடி அறையை விட்டு அத்தியாவசத்துக்குத் தவிர அசைவதில்லை. நல்லவேளை, கடைக்குட்டி கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறான். காலைக்கடன், குளியல், சிறுநீர் உபாதை (இதற்கெல்லாம் தனித்தனி அடையாள சமிக்ஞை கள், அவனுடன் முன்னாலேயே ஏற்பாடு பண்ணிக்கொண் உாகிவிட்டது)-கையைப் பிடித்துக்கொண்டுபோய் கொண்டு வந்துவிடுகிறான். காலைக் காப்பியும் அனந்துதான் கொணர்கிறான். மாடியேறி வருவதற்குள் சூடு கொஞ்சம் ஆறித்தான் போகிறது. இருந்தாலும் குழந்தே கொண்டு வருகிகிறானே!

குழந்தைக்கு அடுத்த பிறந்த நாள் பதினான்கு.

பத்து மணி சுமாருக்கு மூணு சப்பாத்தி. கோமதி எதிரே டீப்பாயில் தட்டை ணங்கென்று வைக்கிறாள்.

"வாய்க்கும், கைக்கும் வழி தெரியுமோன்னோ இல்லை, ஊட்டி விடணுமா? ஏன் இப்படி என்னை மாடிக்கு அலைக்கழித்துத் திணற அடிக்கிறதுலே உங்களுக்கு அலாதி சந்தோஷமோ?’’

பிற்பகல் ஒரு கோப்பை டீ.

இரவு இரண்டு பச்சை வாழைப்பழம்.

இடையில், மதியம் ஒரு மணி சுமாருக்கு மூச்சிறைப்பிலிருந்தே அவள்தான் வருகிறாள் என்பது தெரிகிறது. பாவம் தான், உடல் பருத்துவிட்டது. ஆனால் அந்த உடல்வாகுக் காரர்கள் கொஞ்சம் உஷாராய்த்தானிருக்க வேண்டும். வாரத்துக்கு நாலுவேளை உருளைக்கிழங்கை வெட்டக் கூடாது. சர்க்கரைப் பண்டங்களின்மேல் ஆசை வைக்கத் கூடாது. பகல் தூக்கத்தை மட்டுப்படுத்த வேணும். ஆனால் நான் சொல்லி அவள் கேட்டு, அவள் சொல்வதை நான் கேட்டு அதெல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/9&oldid=1403431" இலிருந்து மீள்விக்கப்பட்டது