பக்கம்:நேசம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா91


களுக்கு, பார்க்க மனமும் இருப்பவர்களுக்குத் தெரியும். அதன் கிழிந்த டாய்மரத்தில், நக்ஷத்திரங்களில் , மூன்று எழுத்துக்கள் பொறித்திருந்தன. அம்மா! சாமாவுக்கு உத்தியோகமும் சீக்கிரமே கூடிவிட்டது. அதெல்லாம் ஒரு முகராசி. சபேசன் சிபாரிசு, சபேசன் வேலை பார்க்குமிடத்திலேயே. பின்னே என்ன, இந்த நாளில், சங்கீதத்தையே வயிற்றுப் பிழைப்புக்கு முழுக்க நம்ப முடியுமா? அதுவும் இந்த நாளில்...சங்கீதார்ப்பணம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சபேசனின் பல புழுக்கங் களில் இதுவும் ஒன்று. இப்போது நாடு பூரா நடந்துகொண் டிருப்பது வயிற்றுப் பிழைப்பா, வயிற்றெரிச்சலா? ஒரு ஞாயிற்றுக்கிழமை சபேசன் ஸ்லுனுக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தான்; தலைவெட்டிக் கொள்ளாமலே, "படா வெறுப்பில் இருந்தான். 'டே, சாமா எங்கேருக்கே? வா இங்கே. ஒரு கத்திரிக் கோல், சீப்பு, கண்ணாடி, ஒரு நியூஸ் பேப்பரும் கொண்டு வா, இன்னிக்கு நீ எனக்கு வெட்டனும், பிறகு தான் உனக்கு வெட்டுவேன். இதிலே சங்கதிகள் வக்கிரம் ஏதும் வேண்டாம். பிடரியையும் காதோரத்தையும் கொஞ்சம் கவனி போதும். இதுக்கு அவனுக்கு அஞ்சு ரூபாய் வேனுமாம். இதுக்கு எனக்கு முன்னால் பத்துபேர் க்யூவி"லே காத்திண்டிருக்கா ஊம், ஊம், ஆகட்டும்.' கெளரி அடித்துக்கொள்கிறாள். "சுவாமி படம், குலாசாரம், கிருத்திகை-யார் அவளைக் காதில் போட்டுக் கொள்கிறார்கள்? சபேசனுக்குப் பட்டாபிஷேகம் ஆனதும் அவன் சாமா வுக்குப் பண்ணினான். சாமாவுக்குத் தேவைகூட இல்லே. ஆனால் சபேசனுக்கு ஆத்திரம் அவ்வளவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/97&oldid=1403527" இலிருந்து மீள்விக்கப்பட்டது