பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளமான ஒளிப்பிழம்பு.

|சக்திதாசன்)

1. சொத்தையுற்ற சமூகத்தைச் சுரண்டுகின்ற கூட்டம், சுகங்கண்டுவதைக்கின்ற முதலாளி வர்க்கம், எத்தனையோ இனிமைதரும் செயலெல்லாம் விட்டு எல்லையிலாத் தொல்லையிலும் துயில்கின்ற ஆள்வோர், தொத்துகிற நோய்பரப்பிப் புதுமைக்குக் குழியும் தோண்டிடுவோர். பேதையரை ஏய்க்கின்ற மக்கள், இத்தனக்கும் எதிராக வெடிக்கின்ற சக்தி, இடரொழிக்கும் எரிமலையே பகுத்தறிவின் இயக்கம்.

2. பழைமையெனும் மிகக்கொடிய காரிருள நீக்கிப் பாழான பேதைமையில் விழிப்புகொளச் செய்து, எழில்மிக்க ஒளிக்கற்றை எங்கெங்கும் பரப்பி, யாவர்க்கும் புத்துணர்வும், எழுச்சியதும் நல்கி, பொழில்கானும் புதுக்களிப்பும் வளருமின் வாழ்வும். புவியுவக்கும் புத்துலக முறைமைகட்கும் நல்ல வழிகாட்டி, மறைக்குமுதிர் கூட்டதையோட்டும் வளமான ஒளிப்பிழம்பே பகுத்தறிவின் இயக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/118&oldid=691407" இலிருந்து மீள்விக்கப்பட்டது