பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கள், மதவாதிகளின்-பழமை விரும்பிக யில் விழு ந்து, பகுத்தறிவும், கன்னம்பிக்கையும் இழந்துவிடுதல் கூடாது. ஆராய்ச்சியைப் புறக்கணித்தல் கூடாது. அ வுக்குப் பிரதானமளிக்கவேண்டும்.

எவர், எதைக் கூறினும் ஆராய்ந்து பார்த்தல் வேண் டும். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்ருர் வள்ளுவர்.

இலக்கியங்களையும், காவியங்களேயும் ஆ ப் த ல் கூடாது என்பர் சில ரசிகமணிகள் பாடல்களைச் சுவைக்கும் பொழுது, ஆராய்ச்சி புகுந்தால் அதன் ரசிப்புச்சுவை குன் றிவிடுகிறதாம். பகுத்தறிவுத் தராசில் காவியத்தை எடை போட்க் கூடாதாம் காவியச் சுவையின் போதையிலே, அறிவை இழக்கவும் துணிகின்றனர். குடியர்க்கும் இவர்க் கும் என்ன வேறுபாடு? கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் இந்த விழிகண் குருடர்களுக்கு, இலக்கியங் களும், காவியங்களும், குலத்துக்கொரு நீதி கற்பிக்கும் மது தர்மத்தையும், வேதங்களையும் பாதுகாக்கத் தோன்றியவை என்பது புரிவதில்லை. ஆராய்ச்சி இவர்களுக்கு வேம்பு!

எதற்கும், எப்பொழுதும், எத்துறையிலும் ஆராய்ச்சி ు * * - 2. 1. 。 * * - கேவை. அதிலும் பள்ளியில் பயிலும் மாணவர்க்கு மிக மிகத்தேவை. அறிவைப் பெருக்குவது கலாசாலைப் படிப்பு. ஆராய் தற்கு ஏற்றஇடமும் அதுதான், பருவமும் அதுதான்! ஆராயும் பண்பை, நம்பிக்கைக்குப் பலியிடக்கூடாது.

கமது கல்வித் திட்டத்தினின்றும், தெய்விகம், மூட நம் பிக்கை, பழமைப் பாதுகாப்பு, வேதபுராணங்களுக்குத்

- - - - - - + ་། -- - கரும் மதிப்பு, இவைகள் இன்னும் ஒழிந்த பாடில்லே. எனவே மாணவர்கள் எச்சரிக்கையே டு பயிலவேண்டும்.

10–6–1951 ல் பெரோஸ்பூர் என்ற இடத்தில் நடை புெற்ற, கல்லூரி மாணவர் கடட்டமொன்றில், காங்கிரஸ் தலைவர் புருஷோத்தமதாஸ் தாண்டன் கூறினர்:

'அச்சில் உள்ளதனைத்தும் வேதவாக்கியம் என்று மாணவர்கள் நம்பிவிடுதல் கூடாது. படித்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் பழக் கத்தை வளர்க்கவேண்டும். வேதங்களையும் கூட ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என்று. தோழர் தாண்டனை, ராஜரிஷி என்று பாரா ட்டிப் புகழ்ந்த கூட்டம் இக்கருத்துக்களைப் புறக்கணித்தா லும், நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்வோமாக. இ. அ ஆ இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/147&oldid=691435" இலிருந்து மீள்விக்கப்பட்டது