பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாச்சாரமும்-பண்பாடும்.

இந்திய கலாச்சாரத்திற்குப் புத்துயிரூட்டுங்கள். பழங் காலப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்’’ என்று அண்மை யில் சில கலைவர்கள், பல இடங்களிலே குரல் எழுப்பியுள்ள னர். கலை, ஆச்சாரம், என்ற சொற்களின் மறைவில், அவர்கள் வெளியிடும் கருத்துக்கள், நம்மை திகைக்கவைக் கின்றன. அறிவும், விஞ்ஞானமும், உரிமை வேட்கையும் தலை தூக்கியுள்ள இவ்விருபதாம் நூற்ருண்டிலே, மக்களே வேத ரிஷிகள் காலத்திற்கு இழுக்கமுயல்கின்றனர்.

உலகப் போக்கும், மற்ற நாடுகளின் முன்னேற்றமும், நமது அறிவுக் கண்களைத் திறக்கவேண்டும். நர்ட்டிலே துளிர்க்கும் முற்போக்கு சக்தியைக்கண்டுமிரண்டு, கலாச்சா ாத்தைக் காட்டி அதனை அழிக்க முயல்வதும், பழங்காலக் காட்டுமிராண்டித்தனங்களைப் பண்பாடு என்று சொல்லிக் காப்பாற்ற முயல்வதும், காலத்திற்கு ஒவ்வாத வீண்வேலை.

அன்மையில் சென்னைக்கு வந்திருக்க 'ஜனதிபதி' இராசேந்திரப் பிரசாத், மயிலாப்பூர் சம்ஸ்கிருதிக் கல்லூரி யில், குப்புசாமி சாஸ்திரியார் ஆராய்ச்சிக் கழகத்தில், வேங் கட்ராம சாஸ்திரியாரால் கொடுக்கப்பட்ட, சீனிவாச சாஸ் திரியார் படத்தைத் திறந்துவைத்தார். அப்போது கூறியுள் ளார்; “இந்தியாவின் கலாச்சாரத்திற்குப் புத்துயிருட்டு வதே நாம் செய்யவேண்டிய வேலை. இதைவிடப் பெரிய காரியம் கிடையாது” என்று. இத்தோடுவிடவில்லை. மேலே நாடுகளின் பகட்டுகளில் நாம் மயங்கிவிடக்கூடாது. கம் பண்டைய கலாச்சாரத்திற்கு மதிப்பு வைக்கவேண்டும். நம் கலாச்சாரத்தில் நாம் வேரூன்றவேண்டும். சமஸ்கிருதம் படிப்பது கலாச்சாரத்தைக் கற்பதாகும்’ என்று திருவாய் மலர்க் தியுள்ளார்.

இதனைப் பார்க்கும்பொழுது 'கலாச்சாரம்’ என்பதே ஒரு பித்தலாட்டம். மனிதன் மனிதன் அடித்துத்தின்னு தற்குப் பின்னப்பட்ட ஒரு மாயவலை என்றே, கினைக்க வேண்டியிருக்கிறது.

சமஸ்கிருதம் கற்பது, கலாசாரத்ன்தக் கற்பதாகுமாம். எனவே சமஸ்கிருத் நூல்களே இந்திய கலாச்சாரத்தின் பிறப்பிடமாகும். ஆகவே வேதங்களும், மது, யாக்ஞவல் கியம், பராசிரம் ஆகிய ஸ்மிருதிகளும், இவற்றினின், தோன்றிய புரான்ம், இதிகாசம், வருணுச்சிரமம், கோயில், குளம், தானம், தருமம், மோட்சம், சங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/78&oldid=691368" இலிருந்து மீள்விக்கப்பட்டது