பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கிதம், பூசாரிக்கனம் யாவும் இந்திய கலாச்சாரத்தின் பிரிவு களாகும். இவற்றைக் காப்பதும், புத்துயிரூட்டுவதும் தவிர, வேறு பெரிய காரியமில்லையாம்! இந்தியாவின் ஜனதிபதி' கூறுகிருர் சாஸ்திரிகள் மகிழலாம். நாம் மிகவருந்துகிருேம். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது தமிழன் பண்பர்டு என்ருல், முப்பத்து முக்கோடி தேவர்கள், காற்புத்தெண்ணுயிரம் ரிஷிகள், கின்னார், கிம்புருடர்' என்கிறது. சமஸ்கிருதப்பண்பாடு. கற்புக்கு ஒரு கண்ணகி’ என்றல், பதிவிரிகை துரோபதையைப் ப்ரீர்” என்கிறது. சமஸ்கிருதப் பண்பாடு. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க் கும்” என்றல், பிராம்மண, கடித்திரிய, வைசிய, சூத்தி ர்ர்களைப் பிரம்மனே படைத்தான்' என்கிறது. சமஸ்கிரு தப் பண்பாடு.எங்கே ஒருமித்த இந்திய கலாச்சாரம்?

இவை போன்ற முரண்பாடுகளைப்பற்றிச் சிந்திக்காம லும், மக்களின் இன்ன்றய மனப்போக்கையும், விழிப்பை யும் பொருட்படுத்தாமலும், இந்தியக் கலாச்சாரம், பண் பாடு, சமஸ்கிருதம் என்று பித்ற்றுவது, நாட்டிலே மொழிப் போருக்கும், இனப் போருக்கும் வித்திடுவதுபோலாகும்.

கலாச்சாரமோ, பண்பாடோ நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் பயன்படுவதாகவும், பொதுவாகவும், சமத்து வம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை கண்ணியப் படுத்துவதாகவும், அறிவுக்குப் பொருத்தமாகவும் இருந்தா லொழிய, இனி மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பழமையைப்பாதுகாத்தல்,இனி எவராலும்முடியாக ஒன்று. எனவேதான், பண்டிதஜவகர்லால் கேட்கிருர், 'நமது பண் பாடு, பண்பாடு என்று பெருமையடித்துக் கொள்கிருேம். ஆல்ை தமது தினசரி வாழ்க்கையில் பண்பாடு இருக்குமிடம் தெரியவில்லை. நமது உள்ளத்தில் தோன்றும் கருத்துக்கள் எத்தகையனவென்ப தறியாமல், பண்பாட்டைப் பற்றிப் பேசுவதில் பயனில்லே. இன்றைய பிரச்னைகளில் கவனம் செலுத்துகிருேமா, அல்லது செத்துச்செல்லரித்துப்போன பண்டைக்காலம்பற்றிக் கனவு காண்கிருேமா?’ என்று.

கலாச்சாரம், பண்பாடு என்று கதைக்கும் கும்பலுக்கு இது கல்ல தெளிவுரையாகும். சிந்திப்பார்கள்ா? భీఫె^^^^^^^^^^^^^^^wwఖశిశyశి, శిశి^^^^^^^^^^^^^^^^^^^^^^^ :சேலம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக முதல் மாநாடு.: 1951 மே 5, 6 நாட்களில் ல்ேத்தில் நடைபெறுகிறது :

ജു, * ^^^^

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/79&oldid=691369" இலிருந்து மீள்விக்கப்பட்டது