பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ു.

YYMACMMMCMMeBeBBBBBBB

மக்கள் கவிஞருக்கு மணிவிழா

ஏடெடுத்துக் கவிதை எழுதுகின்ற நேர்த்தில்

കൃസ്തു

(நன்னியூர், நாவரசன்.)

புரட்சிக் கவிஞருக்குப் பொன்னுடை மணிவிழா பண்டைத் தமிழ்ப்பண்பில் பாய்ந்துவரும் இச்சேதி இன்றைத் தமிழ்மகனின் ஏற்றம் விளக்குவது.

தமிழ்வளர்த்த தார்வேந்தர் தமிழ்நிலத்தில் இன்றில்லை. ஆயினுமென் தண்டமிழ்ப் பண்டியராய்த் தமிழர்கள் இன்றெழுந்தார் அறியாமை, அச்சம் பொய், அறமின்மை, அடிமை அத்தனையும் இற்றுவிழப் பாட்டிசைக்கும் அரசருக்கு மணிவிழாக் கொண்டாட மகிழ்வுடனே எழுந்தவர்கள் அனைவருமே பாண்டியர்தாம்! அறிவியக்க வீரர்,

கலக்காகக் கலையென்று கதையளப்பார் இங்குண்டு அவர்க்கெல்லாம் ஒருவார்த்தை அருங்கவிஞர் கூறுகின்ருf 'ஏலா இருட்டில் எடுக்கின்ற கைவிளக்கு இருள்நீக்க அல்லாது எழிலுக்கே ஏந்துகின்ருர்?"

சோம்பிச் சவநிலையிற் சோர்ந்துவிட்ட நம்வாழ்வில் சுடர்கொளுத்தும் கவிதையிலே கனல்மூச்சே இயல்பன்ருே?

எதிர்வந்து கோலங்கள் எத்தனையோ உலவிடினும் இன்னலிலே தமிழ்நாட்டு இக்கள் துயின்றிருக்கும் நிலயொன்றே அவருயிரிற் சென்று கலப்பதுவாம் அந்த உயிர்க்கலப்பில் ஆர்த்தெழுந்த கவிதை துங்கும்தமிழ்மகனத் துயில்எழுப்பவல்லாது தாலாட்ட விரும்பிடுமோ?

w .

சிப்பி வெடித்துச் சிதறுகின்ற முத்துப்போல் விடுக்கின்ற வார்த்தையில் வெடிக்கின்ற கருத்துக்கள் காலத்துக் கேற்ற கவிதைகள் ஏடுகள் தந்த தமிழ்க்கவிஞர் தமிழர் கவியரசர்.

யாருக்கும் எஞ்ஞான்றும் ஏதுக்கும் அஞ்சாத இணையற்ற பாரதியின் இணைபிரியாத் தோழன் அவர்தந்த சீருக்காய் எதிர்ச்சீர் எடுக்கின்ருேம் கடன்றுக்க எண்ணியல்ல, காணிக்கை யென்றேதான் வாழ்கென்று வாழ்த்துகின்ருேம் வாழ்வெமிக்கு வாய்ப்பதற்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/82&oldid=691372" இலிருந்து மீள்விக்கப்பட்டது