பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21–12–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவே

மலர் 6 சேலம் 21-12-56

|இதழ் 24

அநியாயம்! அநியாயம்!

சேலத்தில் கஞ்சமலைப் பகுதியில் ஏராளமான இரும்பு கிடைக்கிறது; அவற்றைத் தோண்டி எடுத்து உருக்கத் தொடங்கில்ை பல்லாயிரக் கணக்கான வர்க்குத் தொழில் கிடைக்கும்; தென்னடு செல்வம் கொழிக்கும் வள நாடாக மாறும்; வறுமையால்வேலையின்மையால்-வதைபட்டு மாளுகின்ற மக்க ளுக்கு வாழ்வு கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டனர் நாட்டுப்பற்று மிக்க நல்லவர்கள்!

சேலத்தில் பெரிய இரும்புத் தொழிற்சாலை ஏற் படப் போகிறது; கிடைக்கும் இரும்பின் தரம் குறித் துப் பரிசோதனை நடக்கிறது; தொழிற்சாலைக்கு ஏற்ற இடம் பார்க்கப் ப டு கி ற து; வெளிநாட்டுத் தொழில் நிபுணர்கள் பார்வையிட்டுச் சென்றுவிட் டனர் பலித்துவிட்டது பல்லாண்டுகளாகச் செய்த முயற்சி என்றனர் காங்கிரஸ்காரர்கள்! அந்த மந்திரி வந்தார், ஆ.கா அற்புதமான இரும்பு என்ருர்! இந்த மந்திரி வந்தார்; இதோ தொடங்கப்போகிருேம் தொழிற்சாலை என்ருர்; மற்ருெரு மந்திரி வந்தார், "நாங்கள்தென்னுட்டுக்குப்பாரபட்சம்காட்டுவதாகக் கூறுகிருர்கள், சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைப்பதன் மூலம் அந்தக் குறையைத் தீர்க்கப் போகிருேம்" என்று வீராப்புப் பேசினர்.

சேலம் காங்கிரசுக்காரர்-டெல்லி சட்டமன்ற உறுப்பினர், பாரிஸ்டர் எஸ். வி. இாாமசாமி அவர்கள் உண்மையாகவே பாடுபட்டார்: தொழிற் சாலை ஏற்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் காங்கிர சின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று. அந்தோ! போய்விட்டது! எல்லாம் போய்விட்டது! எண்ணமெல்லாம் மண்ணுகி விட்டது! .

இந்தியப் பேரரசின் இரும்பு, உருக்கு, நிதியமைச் சர் டி. டி. கிருஷ்ணமாச்சர்ரி அவர்கள் 18.12.5.6

டெல்லி சட்டசபையில் இறுதியாகக் கூறிவிட்டார். சேலத்தில் இரும்பு, உருக்குத் தொழிற்சால், ! படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை, என்று எத்தகைய அவலச்செய்தி!

தென்னகத்தை வளம்நிறைந்த நாடாக்கும் தீஞ் சுவைக்கனவை - பொருளாதாரம் பூரிக்கச் செய் திடும் கனிச்செல்வ ஒவியத்தைக் கலைத்துவிட்டனர் வடநாட்டுப் பாசிச வெறிபிடித்த காங்கிரஸ் கன வான்கள்! அநியாயம்! அகியாயம்!

திராவிடத் திருநாட்டின் பெருமக்களே! நமககு வாழ்வு தேடிக்கொள்ள, நமது கேவலநிலையை ហ្គ្រា றிக்கொள்ள நமக்குரிமையில்லை; தகுதியில்லை; யோக்கியதையில்லை! இந்த நிலையில் நம்மை வைத திருக்கின்றனர் இந்நாட்டுக் காங்கிரஸ் மகானுபர வர்கள்! நம்நாடு வளம்பெறவேண்டுமாலை, நம மக்கள் நல் வாழ்வு பெறவேண்டுமானல், ஒரவளு சனை புரியும், தமிழகத் துரோக காங்கிரஸ்கட்சிக்குத் தக்க ப்ாட்ம் புகட்டவேண்டாமா?நாட்டு நிலைகண்டு நாணித் தலைகுனியும் நல்லவர்களே! என்ன செய் யப் போகிறீர்கள்? * o

-- ହୁ_! . ଞ୍ଜ ର ଛାଞ୍ଚ SSTୱି -

முத்தமிழ்க் காவலர்.

திருச்சி தோழர், விசுவநாதம் பருத்தறிவு இயக்கம் பெற்ற்ெடுத்த செல்வம்,பைந்தமிழர்:சிறந்த பண்பாளர்; சீர்திருத்தப் பேச்சாளர்; எழுத்தாளர்.

பெரியார் ஈ. வே. ரா. தோற்றுவித்த சுயமரி யாதைக் கட்சியில் அவராற்றிய அரும்பணியும், 1938-ல் நடைபெற்ற மு. த ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாரின் வாரிசாகத் தலைமை யேற்று புயல்போல் நாடுசுற்றிச் செயல்புரிந்த பெருந்திறனும் தமிழகம் மறவாது. அவரது பேச்சுக் கள் உணர்ச்சிக்கு விருந்து, எழுத்துக்கள் அறிவுக்கு விருந்து செயல்கள் அடிமை நோய்க்கு அருமருந்து

திருக்குறளை பகுத்தறிவுச் சல்லடையால் சலித் தெடுத்து, மணி மணியாக மக்கள் மன்றத்திலே வைத்துப் பயன் விளப்பவர். கியாயமாக திராவிட முன்னேற்றக் கழகத் தூண்களிலே ஒருவராகத் திகழ வேண்டியவர்.

திருச்சி த மி ழ் ச் சங்க த் தி ன் சார்பிலே 16-12-56-ல் நாவலர் விசுவநாதம் அவர்க ளுக்கு விழா நடத்திப் பொன்னடை போர்த்து, "முத் தமிழ்க் காவலர்" என்ற பட்டம் வழங்கியுள்ளனர். பாராட்டியுள்ளனர். நாம் மகிழ்கின்ருேம்,செந்தமிழ்க் காவலர்க்குச் செய்த சிறப்பு, தமிழுக்குச் செய்த சிறப்பாகும். வாழ்க முத்தமிழ்க் காவலர் வளர்க அவரது தமிழ்ப்பணி! எமது நெஞ்சுகந்த வாழ்த் துக்கள்! இ இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/218&oldid=691656" இலிருந்து மீள்விக்கப்பட்டது