பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. அமைப்பு

இருப்பிடம்

பசிபிக் பெருங்கடல் அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உள்ளது. இது வடக்கே ஆர்க்டிக் கடலோடும் தெற்கே அண்டார்க்டிக் கடலோடும் தொடர்பு கொள்கிறது.

பரப்பு

இது ஐம்பெருங்கடல்களில் மிகப்பெரியது ஆழமானது; முட்டை வடிவமுள்ளது. இது வடக்கே சுருங்கியும் நிலநடுக் கோட்டில் அகலமாயும் உள்ளது.

இதன் பரப்பு 8 கோடி சதுர மைல். அதாவது அட்லாண்டிக் கடலைவிட இது இரு மடங்கு பெரியது. கிழக்கிலிருந்து மேற்கே இதன் நீளம் 12,000 மைல் வடக்கிலிருந்து தெற்கே நீளம் 10,000 மைல். இதன் கரைகள் ஒழுங்கற்றவை. இதன் கரைக்கோடு குறுகியது.

படிவுகள்

இதன் படிவுகளில் முதன்மையானது சிவப்புக் களிமண் ஆகும். மற்றும், நிலச்சேறும், குழைவுச் சேறும் இதனடியில் உள்ளன.

1–598