பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

அதற்கு மேல் ஒரு மைல் உயரத்திற்கு நீர் நிற்கும். ஆறு மைல் ஆழமுடைய இடங்களும் பல இதில் உள்ளன.

அடிப்பகுதி

இதன் அடியில் உயரமுள்ள மலைகளும், ஆழமுள்ள குடைவுகளும் உள்ளன. மலைகளில் பல நீரினால் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் மேற்பரப்புக்கு மேலும் மலைகள் உண்டு. மலைகள் எரிமலை ஊட்டத்தால் ஆனவை.

வெப்பநிலை

இதன் வெப்ப நிலையிலும், உப்புத் தன்மையிலும் அதிக வேறுபாடுகள் இல்லை. மற்றக் கடல்களை நோக்க, இதன் உப்புத் தன்மை குறைவு என்றே சொல்ல வேண்டும்.

எரிமலைகள்

இதில் பெரிய எரிமலைகள் உள்ளன. கடலுக்கு கீழும், கரையிலும் எரிமலை ஆக்கம் காணப்படுகிறது. இதன் கிழக்குக் கரையில் எரிமலைத் தொடர் உள்ளது. இவற்றில் பல செயலாக்கம் உடையவை; சில ஓய்ந்து ஒழிந்தவை.

தீவுகள்

இதன் மையப் பகுதியில் எண்ணிறந்த தீவுத் தொகுதிகள் உள்ளன. இவற்றை வானில் பால் வழியில் காணப்படும் விண் மீன்களோடு ஒப்பிடலாம்.