பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


நடுக்கோட்டு நீரோட்டம் ஜப்பான் தீவுகளை அடைகின்ற பொழுது, வடகிழக்காக அது திசை திருப்பப்படுகிறது. அப்பொழுது அதற்கு ஜப்பான் நீரோட்டம் என்று பெயர்.

பெருவியன் அல்லது ஹம்போல்டு நீரோட்டம் குளிர்ந்த நீரினால் ஆனது; அண்டார்க்டிக் கடலில் இருந்து கிளம்புவது; தென் அமெரிக்காவின் மேற்குக் கரை வரை செல்வது.

வாணிபம்

இதன் கரைகளில் சில துறைமுகங்கள் இருந்த போதிலும், அட்லாண்டிக் கடலைப்போல் அவ்வளவு வாணிபச் சிறப்புடையது அல்ல.

கொள்கை

பசிபிக்கின் குழி நிலத்திலிருந்து (basin) சந்திரன் அல்லது திங்கள் என்னும் (நிலவுலகின்) துணைக்கோள் பிறந்தது. இப்படியும் ஒரு கொள்கை நிலவுகிறது.

ஆய்வகம்

இராக்கெட்டு ஆய்வுகள் நடத்துவதற்கு ஆய்வுக் கூடமாகப் பசிபிக் பெருங்கடல் உள்ளது. அமெரிக்க வான்வெளி வீரரான கூப்பர் தமது வான்வெளிப் பயணத்தை வெற்றியுடன் முடித்தார்; பின் பசிபிக் கடலில் இறங்கினர். உருசியாவும் பசிபிக் கடலில் எறிபடை என்னும் இராக்கெட்டு ஆய்வுகள் செய்து பார்த்துள்ளது.