பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. பசிபிக் ஆராய்ச்சி

வரலாறு

பசிபிக் பெருங்கடல் சிறியது என்றே மக்கள் நம்பி வந்தனர். பால்போ என்பார் 1513-இல் பனாமாவில் இருந்து கொண்டு கதிரவன் ஒளி பரப்பிய பசிபிக் கடலைக் கண்டார்.

மெஜெல்லன் என்பார் 1520-இல் தம் குழுவினருடன் பசிபிக் கடலைக் கடந்தார். அதிலிருந்து பசிபிக் கடல் பெரியது என்பதை உலகம் முதன் முதலாக அறிந்தது. 1577-இல் டிரேக் என்பார் தம் பயணத்தின் பொழுது பசிபிக்கைக் கடந்து சென்றார்.

17-ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியப் பகுதி ஆராயப்பட்டது. இப்பணி மேலும் விரிவாக 18-ஆம் நூற்றாண்டில் நடைபெற்றது. கேப்டன் குக் என்பாரும் பசிபிக் பகுதிகளைத் தம் பயணங்களின் பொழுது விரிவாக ஆராய்ந்துள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுப் பசிபிக் ஆராயப்பட்டது. பசிபிக் ஆராய்ச்சியில் ஜப்பானும் அமெரிக்காவும் அதிக நாட்டம் செலுத்தியுள்ளன.

ஆராய்ச்சித் திட்டத்தில் திருப்பு மையத்தை நில இயல்நூல் ஆண்டு ஏற்படுத்தியது. இதன் ஒரு பகுதியாகக் கடல்களும் ஆராயப்பட்டன. தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்-