பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. பசிபிக் போர்
(1941-45)

கடும் போர்

அட்லாண்டிக் பெருங்கடல் போலவே, பசிபிக் பெருங்கடலும் இரண்டாம் உலகப்போரில் போர்க்களமாகத் திகழ்ந்தது.

பசிபிக்போர் என்பது இரண்டாம் உலகப் போரின் தொடர்பாக 1941ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போராகும். உண்மையில், இது கடும் போராகும்.

தொடங்குதல்

1941ஆம் ஆண்டு டிசம்பர் 7 இல் இப்போர் தொடங்கிற்று. அமெரிக்கக் கடல்தளம் பேள் ஹார்பரில் (ஹாவாய்) உள்ளது. இதை ஜப்பான் விமானங்கொண்டு தாக்கிற்று ; பசிபிக் போரும் தொடங்கலாயிற்று. முன்பே ஜப்பான் சீனாவுடன் தொடுத்திருந்த போரின் விரிவே இப்போர்.

திட்டமிட்ட தாக்குதல்

அமெரிக்காவுடன் ஒரு பக்கம் நல்லுறவு கருதி ஜப்பான் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. அதே நிலையில் மற்றொரு பக்கம் முன்னறிவிப்பு இல்லாமல், பசிபிக் பகுதியிலுள்ள பேள் ஹார்பர் முதலிய கடல் தளங்களைத் தாக்கி ஜப்பான் பாழ்படுத்தியது. மளமளவென மற்றப் பகுதிகளையும்