பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. பசிபிக் அலுவல் நிலையம்

நோக்கம்

இது பொது நிலை நிலையமாகும். பசிபிக் பகுதியிலுள்ள மக்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

அமைப்பு

இதை இயக்கப் பசிபிக் மன்றம் என்று ஓர் அமைப்பு உள்ளது. இந்நிலையத்தில் அமெரிக்கா, சீனா, ஹாவாய், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து முதலிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்கென்று தனிச் செயலகம் (Secretariat) உள்ளது. இதன் தலைமையிடம் ஹோனோலுலுவில் உள்ளது. கூட்டங்கள் கூட்டுவதும், ஆராய்ச்சியை மேற்கொள்வதும் இச் செயலகத்தின் பொறுப்பில் உள்ளது.

நிதி

ஆராய்ச்சி நிறுவனங்களும் தனியாரும் இதற்குப் பொருள் உதவி செய்கின்றனர்.

தோற்றம்

ஹாவாயிலுள்ள வணிகரும் மற்றத் தொழிலில் ஈடுபட்டிருப்போரும் சேர்ந்து இதைத் தோற்றுவித்தனர். இதன் முதல் கூட்டம் 1925இல் தலைமயிடத்தில் கூடிற்று. இக்கூட்டத்தில் பசிபிக் பகுதியிலுள்ள பல நாட்டு மக்களின் பேராளர்கள் கூடித் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.