பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. பசிபிக் தீவுகள்

இருப்பிடம்

பசிபிக் பெருங்கடலில் மலேயன், ஆஸ்ட்ரலேசியன் தீவுகளுக்குக் கிழக்காக அமைந்துள்ள தீவுகளே பசிபிக் தீவுகள் ஆகும். இவை எண்ணிக்கையில் அதிகமுள்ளவை; தொகுதியாகவும் சிதறியும் அமைந்துள்ளவை.

அமைப்பு

இவை மலையாலும் பவழத்தாலும் ஆனவை. எல்லாம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவை அல்ல. சில செழிப்பானவை. இவை பெரும்பாலும் அமைப்பு, விளைபொருள்கள் முதலியவற்றில் ஒன்றுக் கொன்று ஒத்திருப்பவை. இவற்றின் முழுப்பரப்பு 60,000 சதுர மைல். இங்கு எப்பொழுதும் வேனிற்காலமே.

வகை

பசிபிக் தீவுகளைப் பொதுவாக மூன்று வகையினுள் அடக்கலாம். அவை யாவை ?

மைக்ரோனீசியா அல்லது சிறிய தீவுகள்: இவை பசிபிக் கடலுக்கு மேற்கேயும் நியூகினியாவிற்கு வடக்கேயும் உள்ளவை. பீஜித்தீவுகள், மார்ஷல் தீவுகள், நட்புத் தீவுகள் முதலியவை இவற்றில் அடங்கும்.