பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பள்ளிகளில் சீன ஜப்பானிய மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்குள்ள ஹாவாய்ப் பல்கலைக் கழகத்தில் 6,000 மாணவர்களுக்குக் குறையாமல் படிக்கின்றனர்.

ஹாவாய் மொழி இரண்டாம் மொழியாக உள்ளது. இங்கு ஏழு நாளிதழ்கள் வெளியாகின்றன. மற்றும் பல வகைப்பட்ட 17 இதழ்களும் வெளியிடப்படுகின்றன. இங்கு 7 தொலைக்காட்சி நிலையங்களும் 15 வானொலி நிலையங்களும் உள்ளன.

மக்கள்

இங்குப் பல இன மக்கள் வாழ்கின்றனர். காகசியர், கீழ்நாட்டார், ஆப்பிரிக்கர். இங்கு முதலில் குடியேறியவர்கள் பாலினீசியர்கள். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் தாகிதித் தீவிலிருந்து வந்தவர்கள். பின் ஜப்பானியர், சீனர், அமெரிக்கர், ஐரோப்பியர், ஆப்பிரிக்கர் ஆகியோர் வரலாயினர். மக்கள் தொகை 6 இலட்சத்திற்கு மேல் உள்ளது.