பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


வார இதழ்கள் வெளி வருகின்றன. தவிர ஆங்கிலத்தில் நாளிதழ் ஒன்றும், சங்கம் என்னும் தமிழ் இதழும் வெளி வருகின்றன.

கல்வி

இங்கு 33 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசினர் பள்ளிகள் 10; இந்தியர் பள்ளிகள் 8; கிறித்துவப் பள்ளிகள் 13; சீனப் பள்ளிகள் 2. இப்பள்ளிகளில் படிப்போர் கேம்பிரிட்ஜ் தேர்வு அல்லது நியூசிலாந்து தேர்வு எழுதுவர். இங்குச் சிறந்த மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இந்தியர் தொடக்கப் பள்ளிகளில் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, குஜராத்தி மொழிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதற்குமேல் பயிற்றுமொழி ஆங்கிலமாக உள்ளது.

ஆபி

கவர்னர் அல்லது ஆளுநர் ஆட்சி நடைபெறுகின்றது. கவர்னர் பிரிட்டனால் அமர்த்தப்படுகிறார். கவர்னருக்குத் துணையாக நிறைவேற்று மன்றமும், சட்ட மன்றமும் உள்ளன.