பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. பசிபிக் கடலின் பல்வளங்கள்

பசிபிக் கடலின் வளங்கள் பல. இங்கு அதன் உயிர்வளம், கனிவளம் ஆகியவை பற்றிக் காண்போம்.

பிளாங்டான் வளம்

1966-ஆம் ஆண்டு சோவியத்து விட்யாஸ் கப்பல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் கடலின் ஒரு பகுதியின் உயிரமைப்பை ஆராய்ந்தனர். பிளாங்டான்கள் என்பவை நுண்ணிய தாவரங்களாலும், விலங்குகளாலும் ஆன கடல் உயிர்கள் ஆகும். இவை மீன், திமிங்கிலம் முதலிய கடல் உயிர்களுக்கு உணவாகும். இவை முதல் நிலை உற்பத்தியாளர்கள். இவற்றின் தொகை, பரவல், வகை பற்றித்தெரிந்து கொள்ள ஆராய்ச்சி நடந்தது. கடலில் 8700 மீட்டர் செங்குத்தாக இவை ஆராயப்பட்டன.

மேலடுக்கில் 50 மீட்டர் ஆழத்தில் ஒரு கன மீட்டருக்கு 500 மில்லி கிராம் பிளாங்டானும், 6000-7000 மீட்டர் ஆழத்தில் ஒரு கன மீட்டருக்கு, அவை 0.5-0.8 மில்லி கிராமும், 7000-8000 மீட்டர் ஆழத்தில் ஒரு கன மீட்டருக்கு அவை 0.15-0.3 மில்லி கிராமும் இருப்பது நன்கு புலனாயிற்று.

ஆழத்திற்குத் தகுந்தவாறு அவற்றின் அளவு மாறுபடுவது மட்டுமல்லாமல், வகையிலும் வேறுபாடு காணப்படுகிறது. வடிகட்டக்கூடிய பிளாங்டன்கள் மேலடுக்கில் உள்ளன. ஆழம் அதிகமாக அதிகமாக அவை குறைகின்றன. 1000-3000 மீட்டர் ஆழததில் அவற்றில் பெரும்பகுதி இரை-