பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

7)
குரிலிஸ் - காம்சாட்கா (Kuries-Kamchatka) அகழி,பசிபிக் கடலில் ஆழமானது. இங்கு முட்தோலிகள், பசிய நிறமுள்ள எக்யுராடுகள் (Echiurods) ஐசோபாடுகள் (Isopods), நத்தைகள் முதலியவை காணப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்பு போகனோபோரா (Pogonophora) ஆகும். இவை கடற்தரையில் பதிந்துள்ள நீண்ட குழாய்களில் வாழ்கின்றன.
8)
கடல் தரையில் பொராமினிபெரா உயிர்கள் அதிகம் உள்ளன. எல்லா ஆழங்களிலும் அவை காணப்படுகின்றன.
9)
இவ்வாராய்ச்சியினால் கடல் உயிர் பற்றிய விதிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.