பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. வானவெளிக் கலக் கடலியல்

(Spacecraft Oceonography)

இத்துறை 1957-ஆம் ஆண்டுக்குப்பின் வான வெளி ஆராய்ச்சியினால் உருவானது. இதில் வான வெளிக் கலங்கள் கடல்களை ஆராய்ந்து பல பயனுள்ள செய்திகளைத் திரட்டப் பயன்படுகின்றன. இத்துறையின் பயன்களாவன.

1)
கடல் மேற்பரப்பு வெப்ப நிலைகள் வான வெளிக் கலங்களின் உதவியினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2)
அமெரிக்க நிம்பஸ் வானிலை நிலா கல்ப் நீரோட்டத்தை அறிந்து, அதில் சிக்கி மீன் கப்பலை மீட்க உதவியது.
3)
அமெரிக்க டிராஸ் நிலாக்கள் இந்தியக் கடலில் உருவாகிய புயல்களை முன் கூட்டியே அறிவித்தன.
4)
நிலாக்கள் பூமியைச் சுற்றிவரும்பொழுது கடல் நிலையினை (Sea State) அறிய உதவியுள்ளன
5)
கடல் நீரின் வெப்ப நிலையைக் கொண்டு மீன் பிடிக்கும் இடங்களை வானவெளிக் கலங்களைக் கொண்டு அறியலாம்.
6)
அமெரிக்க ஜெமினிக் கப்பல்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் கடல்தரை பற்றியும், நீரோட்டங்கள் பற்றியும் அறிய உதவியுள்ளன. பொதுவாக, மலைத்-