பக்கம்:பசி கோவிந்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 பசி கோவிந்தம்

ஆமாம், சொல்லிவிட்டேன்-இந்தக் காலத்துக் குடியாட்சியில் இதற்குமேல் சொல்வதற்கில்லை. அந்தக் காலத்து முடியாட்சியிருந்தால் அது வேறு விஷயம். மன்னனை வசப்படுத்திக் கொண்டு, வருணு சிரம கர்ம’த்தைத் தர்மம்' என்று சொல்லிக் கொண்டு, படித்தால் காக்கை அறுத்து விடுவேன், மூக்கை கறுக்கி விடுவேன்!" என்று உன்னைப் பய முறுத்தலாம். இப்போது அப்படிப் பயமுறுத்த முடியாது. அதனுல்தான் சொல்வதைக் கொஞ்சம் நாதுக்காகச் சொல்லியிருக்கிருர் ஆசான். அவருடைய பல்லக்கைச் சுமக்கும் உனக்கு ஏன் படிப்பு?-அட மூடா! படிக்காதே; படித்தால் அவருடைய பல்லக்கைச் சுமக்க நீ மறுத்து விடுவாய்! எதையும் பகுத்தறிந்து பேச ஆரம்பித்து விடுவாய்!-உனக்காகச் சாக வழி காட்டும் ஆசான்-இல்லை, சொர்க்கத்'துக்குச் செல்ல வழி காட்டும் ஆசான் கடக்க முடியுமா? * Gr৫ষ্ঠা &কা ஆக்கும் பகவான், என்னை அழிக்கும் பகவான், உங்களைக் காப்பதுபோல் என்னையும் ஏன் காக்க வில்லை?” என்று நீ கேட்டால் அதற்கு அவரால் பதில் சொல்ல முடியுமா?-பரக்தாமனையும் பரலோகத்தை யும், பாவத்தையும் புண்ணியத்தையும் கம்பி நீ படிக் காமல், பாண்டித்தியமடையாமல் இருந்தால்தானே அவரைப் போன்றவர்கள் வம்பில்லாமல் வாழ முடியும்? கையசைக்காமல், காலசைக்காமல், காவொன்றை அசைத்தே நவநிதியும் தேட முடியும்?-படிக்காதிரு, பயலே! படித்தால் எங்களை எதிர்க்க உனக்குத் தைரியம் வந்துவிடும். அந்தத் தைரியத்துக்கு எங்கள் தனித் தமிழ் அகராதி'யில் என்ன அர்த்தம், தெரியுமா? கர்வமடா, கர்வம்! அந்தக் கர்வத்துக்கு கீ உள்ளானுல் கடவுள் கோபித்துக் கொள்வார்-என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/12&oldid=590876" இலிருந்து மீள்விக்கப்பட்டது