பக்கம்:பசி கோவிந்தம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 17

கொடுக்கும்; அடைந்த பொருளை எப்படியாவது, என்ன செய்தாவது காக்க வேண்டுமே என்ற ஏக்கமும் பிறக்கும்.

'கான்தான் இதுவரை எந்தப் பொருளையும் அடைய வில்லையே! என்கிருயா? - அதனுலென்ன, அடைக் தவன் அனுபவத்தைச் சொன்னுல் அடையாதவன் அதைக் கேட்டுவிட்டுச் சும்மா இருக்க வேண்டியது தானே? - கேள், இன்னும் கேள்! வாழ்க்கையில் சஞ்சலத்தைத் தவிர வேருென்றும் இல்லை; அதைத் தீர்த்துக்கொள்வதற்கு உனக்குள்ள ஒரே வழி சாவு!

பயப்படாதே! - பரலோகத்தில் உனக்கு நிச்சயம் இடம் உண்டு; இகலோகத்தை மட்டும் எங்களுக்கும் எங்கள் ஆதரவாளர்களுக்கும் விட்டுவிடு!

S

LD&Gavr, திடுக்கிடாதே! - இதுவரை பயலே!" என்று அழைத்துவிட்டு, இப்பொழுது 'மகனே' என்று ஆசான் அழைக்கிருரே என்று திடுக்கிடாதே!அவருக்குத் தெரியும், உன்னே எப்பொழுது எப்படி அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்றுகேள், டயலே என்ருலும் பாவி என்றலும், முட்டாள் என்ருலும் மூடா என்ருலும் பயபக்தியுடன் கேள்:

சொந்தம் பொய், பந்தம் பொய், எல்லாம் பொய், மகனே!

சோற்றுக்குத் தாளம் நீ போடு,

போட்டாலும் சொல்லாமல் ஒடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/19&oldid=590883" இலிருந்து மீள்விக்கப்பட்டது