பக்கம்:பசி கோவிந்தம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பசி கோவிந்தம்

மடாதிபதியை கம்பு; தன்னையும் தன் சாக்குருவி வேதாந்தத்’தையும் தவிர மற்றவையெல்லாம் மாயை என்று அவர் சொல்வதை கம்பு!

படிப்பு வேண்டாம்; பணம் வேண்டாம். வீடு வேண்டாம்; வாசல் வேண்டாம். சொந்தம் சுற்றம், பந்தம் பரிவாரம் ஒன்றுமே வேண்டாம்-ஐயோ, மரணம் வந்து விடுமே!’ என்று சதா பயந்துகொண்டே இரு; யாரையும் கம்பாமல், ஐயோ, அவர்கள் ஓடி விடுவார்களே! ஐயோ, அவர்கள் ஒடி விடுவார்களே! என்று சதா அலறிக்கொண்டே இரு! - அதுவே விவேகம்; அந்த விவேகமே என்னே வாழ வைக்கும்என்ன, என்னை வாழ வைக்கும்’ என்ரு சொன் னேன்?-இல்லே, உன்னையும் வாழ வைக்கும். அதற் குத்தான் நீ செத்த பிறகு கூட டாக்டர் உன்னைக் கைவிட்டாலும் கான் கைவிடுவதில்லை! - வருஷா வருஷம் சிரார்த்தம் செய்யச் சொல்கிறேன்; உனக்கு வேண்டிய அரிசி, பருப்பு ஆகியவற்றையெல்லாம் உன் வீட்டாரிடமிருந்து வாங்கி, என் வீட்டுக்கு அ வற்றைக் கொண்டு போய் விடுகிறேன்-வானுலகி லிருக்கும் உனக்கு என் வயிற்றின் மூலமாக அனுப்பி வைக்கத்தான்!

என்ன அகியாயம்!-இயற்கை செய்யும் அகி யாயத்தைத்தான் சொல்கிறேன்-குழந்தைப் பருவம்

விளையாட்டில் கழிந்துவிடுகிறது; யெளவனம் வந்த தும் சிந்தனை முழுவதும் பெண்களின்மேல் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/22&oldid=590886" இலிருந்து மீள்விக்கப்பட்டது