பக்கம்:பசி கோவிந்தம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 21

விடுகிறது; விருத்தாப்பியத்திலோ மனைவி மக்களைப் பற்றிய கவலை வந்துவிடுகிறது- இப்படியே போய்க் கொண்டிருந்தால் கடவுளின் கதி என்ன? அவரை நம்பியிருக்கும் காவி வேட்டிக்காரரின் கதிதான் என்ன?

கைவிடாதே கைவிடாதே

கைவிடாதே, கடவுளே! கடவுளைக் கைவிட்டநீ

கஷ்டப்பட்டு வாழலாம்! காவிவேட்டிக் காரருன்போல் கஷ்டப்பட முடியுமா? கடவுளைக் கைவிட்டபின்

காலந்தள்ள முடியுமா?

ஐயோ, கினைக்க நினைக்க வருத்தமாயிருக் கிறதே!-என்ன செய்வேன்? எப்படிப் புலம்புவேன்? இயற்கைகூட எங்களுக்கு எதிரியாயிருக்கிறதே!அதற்காக நீ கடவுளே கினைக்காமல் இருந்து விடாதே! வாழ்க்கை வசதி மிக்க வெள்ளேக்காரனே வாரத்துக்கு ஒரு நாள் கடவுளே கினைத்துவிட்டு, மற்ற நாட்களில் தனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லாதவன் போல் நடந்து கொள்ளும்போது, வாழ்க்கை வசதியற்ற கான் ஏன் காலை மாலை இரு வேளையும் ஒரு காள் விடாமல் கடவுளைத் தொழ வேண்டும், காலம் முழுவ தும் அவரை ஏன் கட்டிக்கொண்டு அழ வேண்டும்?” என்றெல்லாம் கேட்டு எங்கள் வாயில் மண்ணேப் போட்டு விடதே! ஏற்கெனவே அறுபத்து மூன்று காயன்மார்கள் என்றும், எப்பொழுதும், எந்தக் காலத்திலும் அறுபத்துமூன்று காயன்மார்களாக இருந்து கொண்டிருப்பதே எங்களுக்கு என்னவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/23&oldid=590887" இலிருந்து மீள்விக்கப்பட்டது