பக்கம்:பசி கோவிந்தம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பசி கோவிந்தம்

அவஸ்தைப் படுவதுண்டு; தங்களுக்குள் தாங்களே சண்டையிட்டுக் கொண்டு மண்டையை உடைத்துக் கொள்வதும் உண்டு. ஆனல் அதற்கெல்லாம் காரணம் 'அன்பே தவிர, இவனுக்கு முன்னுல் காம் ஊரை ஏமாற்றிவிட வேண்டும் என்ற ஆத்திரம் அன்றுநீங்கள்தான் சொல்லுங்களேன், இல்லாதவனை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன?-எல்லாம் ஒன்றே!பார்க்கப் போனுல் அந்த ஒன்றும் இல்லை என்கிறர் மாணிக்கவாசகப் பெருமான்:

"ஒருநாமம் ஒருருவம்

ஒன்றுமில்லானுக்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம்

தெள்ளேணம் கொட்டோமோ!'

ஆஹா! என்ன கும்மாளம், பாருங்கள்-ஒன்று மில்லாதவனுக்கு ஆயிரம் திருகாமம் பாடித் தெள் ளேனம் கொட்ட வேண்டுமாம்!-அது மட்டுமா!

“என்னுடை(யாரது எங்கள் அப்பன்

எம்பெரு மான் இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்

தமையன் எம்ஐயன் தாள்கள் பாடி!"

என்றும் திருவாசகம் செப்புகிறது-அதாவது, சர்வே சுவரனுக்குப் பேதமில்லை. அவருக்குத் தகப்பனும் தமையனும் மட்டுமல்ல; தாயும் தாரமுங்கூட ஒன்றே! - அதைக் கண்டு காம் ஏன் குழம்ப வேண்டும்?-- நாமும் அவ்வாறே கடந்து கொண்டால் போச்சு!

துறவறத்தில் நினைத்தபோதெல்லாம் அவ்வாறு கடந்து கொள்ள முடியாதே' என்கிறீர்களா?--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/48&oldid=590912" இலிருந்து மீள்விக்கப்பட்டது