பக்கம்:பசி கோவிந்தம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாசகர்களுக்கு


நீங்கள் எத்தனையோ நூல்களைப் படிக்கிறீர்கள்; படிக்கும் போது உணர்ச்சி வசப்படுகிறீர்கள்; உங்கள் - கற்பனை சிறகடித்துப் பறக்கிறது; என்னவெல்லாமோ எண்ணுகிறீர்கள். அவற்றில் சில உங்களைச் சிரிக்க வைக்கின்றன; சில சிந்திக்க வைக்கின்றன; சில அழ வைக்கின்றன; இன்னும் சில ஆத்திரமும் கொள்ள வைக்கின்றன. அவையனைத்துக்கும் சேர்ந்தாற்போல் ஓர் உருவம் கொடுத்தால் எப்படியிருக்கும்? - அதுவே 'பசி கோவிந்தம்' என்னும் இந் நூல்.

தமிழில் இது ஒரு துறை-ஆம், தற்போது மறைந்து கிடக்கும் துறை. இத் துறைக்கு,

“இருவர் நூற்கும்
ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது
புடைநூ லாகும்”

என்று நன்னூல் இலக்கணம் கூறுகிறது. அதன்படி, இந்நூலின் முதல் நூல் திரு. சங்கராச்சாரியாரின் ‘மோகமுத்கர’மாகும். முத்கரமென்றால் ‘மோகத்தை உடைக்கும் சம்மட்டி’ என்று பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/5&oldid=1400745" இலிருந்து மீள்விக்கப்பட்டது