பக்கம்:பசி கோவிந்தம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 53

கண்டுகொண்டாயா, வழியை? - இங்கே நீயும் கானும் இல்லையென் ருல் அங்கே மட்டும் என்ன இருக்கும்? - அதைப்பற்றி யோசிக்காதே! - அப்படி யோசிக்க வேண்டுமென்று தோன்றினுல் உடனே போட்டுவிடு, கோவிந்தா!

கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!'

ஆஹா! இப்போது அந்த யோசனையே அடி பட்டுப் போய்விட்டது, பார்த்தாயா?-அதுவே வழி: அதுவே வழி! - பிடித்துக்கொள்; கெட்டியாகப் பிடித்துக்கொள்!

விட்டுவிடாதே! - விட்டால் உலகில் புலனுகும் பொருள்களனைத்தும் மெய்ப்பொருளிலிருந்து உண் டான பொய்ப்பொருள்கள் என்கிருர்களே, அப்படி யானுல் அந்தப் பொய்ப் பொருள்களே மெய்ப் பொருள் ஏன் படைத்தது? படைத்துவிட்டு எல்லாம் வெறுங் கனவு, எல்லாம் வெறுங் கனவு என்று ஆசானையும் அடியானையும் ஏன் கதறவைக்கிறது?’ என்றெல்லாம் உனக்குக் கேட்கத் தோன்றும். அதற்கு இடங் கொடுக்காதே. கொடுத்தால் காஸ்திகளுகி விடுவாய்போடு, கோவிந்தா! போட்டு விடு, கோவிந்தா!-வாழ்க் கைக்குக் கோவிந்தா! வளத்துக்குக் கோவிந்தா!கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா! - சங்கராச்சாரிய சுவாமிகளே, சரணம்!

24

இதோ பார், அவன் வாழ்கிருனே, காம் வாழ வில்லையே! என்று நீ ஏன் கவலைப்படுகிருய்? ஏன் பொருமை கொள்கிருய்? ஏன் கோபங் கொள்கிருய்? அவற்றை வளர்த்து ஏன் வாழ வழி கோலுகிருய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/55&oldid=590919" இலிருந்து மீள்விக்கப்பட்டது