பக்கம்:பச்சைக்கனவு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக ரேகை C 115

வீசியெறிந்தேன். கவண் கல் போல் அது கிளம்பிச் சென்று நேரே தூய பொன்னிறத்துடன் பிறந்துகொண்டிருக்கும் உதய சூரியனில் போய் வீழ்ந்தது. கண்ணில் துரசு பட்டாற் போல் சூரிய கோளம் குலுங்கிற்று.

ஆச்சரியம் அச்சிறு உமி, கண் இமைக்குமுன் கண்ணுக் கெதிரே பெரிதாக்கிக்கொண்டே உதய சூரியனை விழுங்குவது கண்டேன். இன்னமும் திரண்டு, ஆகாய வீதியை அடைத்துப் படர்ந்தது. மஞ்சள் மேகங்கள் விண்டு குழைந்து கருகி ஒன்றாயின. அம் மாமேகம் குன்றுகளின் நீலத்தையழித்துக் கொண்டு அவைமேல் கவிந்து இறங்குகையில், குன்றின் உச்சிகளிலிருந்து ரத்த ஆறு பெருகி வழிந்து அங்கங்கே ரத்தக்கட்டிகள் இறுகிக் கறுத்தன. பயிர்கள் வதங்கிக் கருகிச் சருகாய்ச் சாய்ந்தன.

அந்த ராக்ஷஎ மேகம் இப்போது என்னை நோக்கி விரைந்து என்னை விழுங்க ஆரம்பித்தது. தப்ப வழி யில்லை. முடியவில்லை. ஏற்கனவே நாச தரிசனத்தில் கைகால்கள் செயலிழந்துவிட்டன. அதை உதற கைகால்கள் உதைகையிலேயே, இடுப்புவரை அதனுள் அழுந்தி, இன்னும் புதைந்து கொண்டிருந்தேன். நான் உளையுள் மோவாய் வரை மூழ்கிக் கொண்டிருக்கையிலேயே நாடா நாடாவாய் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த வெள்ளி ஜரிகை அம்மேகத்திற்குக் கரைகட்டிக் கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டேன். என் வாயிலிருந்து ஒரு அலறல் கிளம்பிற்று.

விழித்துக் கொண்டேன். மேல் போர்வையைப் பிராண்டிக் கொண்டிருந்தேன். பயத்தால் வேர்வையில் தலைமயிர் நனைந்து நெற்றியில் அடையாய் ஒட்டிக் கொண்டிருந்தது.

இந்தக் கனவை இரண்டாந்தடவை காண்கிறேன். போன தரம் ஆபரேஷன்போது மயக்க மருந்தின் போதை யில் இமைத்திரையில் முதன் முதலாய்ப் படிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/124&oldid=590782" இலிருந்து மீள்விக்கப்பட்டது