பக்கம்:பச்சைக்கனவு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மண்

உள் சரிந்த கூரை தலையிலிடிக்கும் ஒரு குடிசைத் திண்ணையில் உட்காந்து கொண்டேன். அவன் பூமியில் புதைந்த ஒரு ஆட்டுக்கல்மேல் குந்திட்டுக்கொண்டான்.

"இந்த வெய்யிலைப் பார்த்தீர்களா? இதில் எது புளைக்கும்? இந்த செங்கற்பட்டு ஜில்லாவிலேதான், இந்த மாதிரி வெய்யிலும், இந்தமாதிரி பாழடைந்த பேட்டை யும். ரோட்டுலே போயிட்டேயிருங்க, நடுவுலே நடுவிலே ஒரு பத்து வீடு, பதினைஞ்சு வீடு வெறும் குட்டிச் சுவர் மாத்திரம் நின்னிட்டிருக்கும். மழையிலே கறைஞ்சு, வெய்யில்லே உளுத்து

இந்தப் பக்கத்திலே தண்ணி நிற்கிறதில்லே. என்னவோ பெரிசா பாலாறு வேகவதின்னு பெருமையா சொல்லு வாங்க. ஆனால் நான் பாக்கறது மணல்தானுங்க. வருசத்திலே பத்து மாசம் எனக்குத் தெரிஞ்சவிடமெல்லாம் மணல்தான். ஏதோ தூத்தலுக்கு குட்டையிலும், ஏரி யிலும் கட்டுதே, அதுதான் குடிக்கறத்துக்கு, குளிக்கறத் துக்கு, கை கால் களுவறத்துக்கு, பயிருக்கு எல்லாத்துக்கும்.

பயிரான பயிர், என்ன பயிர் போங்க! புளியங்காத்து நெருப்பு தலை சுத்துது. பிணம் வேகறத்துக்குக் கட்டைக்கு குறைவில்லை கந்தக பூமி, பூமியின் குடலையே புடுங்கி எறியற மாதிரி ஏரையளுத்திப் போட்டு உளுதாலும் கல்லு தடுக்கி இரும்புதான் மொக்கையாவும். இந்தப் பக்கம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/133&oldid=590791" இலிருந்து மீள்விக்கப்பட்டது