பக்கம்:பச்சைக்கனவு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 C லா. ச. ராமாமிருதம்

என்ன ஆச்சரியம்! பொறுப்பில்லாமல், சின்னக் குழந்தை மாதிரி. அப்படியே அவளும் காலத்தைத் தள்ளி விட்டாளே! சரியா மூனுவருஷங்கூட வாழவில்லை இதே மாதிரி ஒருநாள் ராத்திரி கொட்டுமழையில் எங்கேயோ காட்சி பார்த்துவிட்டுத் தெப்பமாய் நனைந்து வந்து உடம்பு வெடவெடவென உதறிக்கொண்டு வந்து படுத்தவள்தான்.

மூணாம் நாள் காலி

உடம்பு என்னவோ பூஞ்சை. அவள் வேலை வெட்டிக்கு லாயக்கில்லை ஆனால் அதை நம்பியா பண்ணிண்டோம்? என்னவோ நமக்கு வயது ஆகிண்டே வரதே, இந்த புத் என்னும் நரகத்தைத் தாண்ட மாட்டோமா என்கிற சபலம்தான். ஆனால் பிராப்தி வேண்டாமா? நாம் என்ன செய்வது?

ஏதோ நாமும் சாப்பிடுகிறோம். ஆமாம்! தன் வயிற்றுக்கே தின்னாத கருமிகள் எத்தனைபேர் இல்லை? தனக்குப் போடுவதே தருமம், பெண்டாட்டிக்குப் போடுவது தானமாயிருக்கும் இந்நாளில் நம் வீட்டிலும் நாலுபேர் சாப்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமை தவறினா லும் கோவில் அர்ச்சனை தவறுவதில்லை பிரதி தினமும் சாளக்ராம பூஜை பண்ணுகிறேன். ஏதோ சாப்பிட உட்காரும் வரை என்னால் முடிந்த வரை. நாலுபேர் மாதிரி பூணுரலை முதுகு சொறியவும், சோப்பு அறுக்கவும் மாத் தி ர ம் உபயோகிக்கிறேனா? ஞாயிற்றுக்கிழமை தோறும் திண்ணையில் உட்காந்து என் கையாலேயே ஒரு பிடி அரிசி பிச்சைக்காரர்களுக்கு அள்ளிப்போட வில்லையா? அதுவும் என் கையென்ன சின்னக்கையா? மடி ஆசாரம், ஜபம் வெச்சிட்டிருக்கேன். காசியிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் தீர்த்த யாத்திரை போயிருக் கிறேன். கோவில் குளம் என்று எவ்வளவு பணத்தை வாரியிறைத்திருக்கிறேன்! பண்ணிக்கொண்ட அத்தனை கலியாணங்களும் என் செலவில் தானே! வரதrணைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/147&oldid=590805" இலிருந்து மீள்விக்கப்பட்டது