பக்கம்:பச்சைக்கனவு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கல்யன் 0 145

அதற்குள் அவசர அவசரமாய் எழுந்து வெளியே வந்து குழாயண்டை போய் சொம்பு பச்சை ஜலத்தை மடக் மடக்கென்று குடித்து விட்டாள். குடித்துவிட்டு அவள் சொம்பைக் கீழே வைக்கறதுக்கும் இப்பொ மாதிரி யிருக்கிறது- அம்மா சமையலறையிலிருந்து வெளியே வந்து இந்தக் கோலத்தைப் பார்த்துவிட்டு கன்னத்தில் அறைந்து கொண்டு நிக்கறதுக்கும் நான் பத்தியத்துக் கென்று பிஞ்சு கத்திரிக்காயா பார்த்து வாங்கி உத்தரி யத்தில் முடிச்சுப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையறதுக்கும்

"துளசி! என்ன காரியண்டி பண்ணினே?-’’

'இல்லே அத்தை, தாகம் தாங்க முடியல்லேசொம்பைக் கவிழ்த்து வெச்சிருக்கேன். தண்ணியைத் தெளிச்சு எடுத்துக்கோங்கோ. அமைதியாய் நடந்து போய் படுக்கையில் படுத்தவள்தான். அப்புறம் எழுந்திருக் கவேயில்லை. அன்று பகலும், இரவும் அந்த உடம்பில் காய்ந்தது ஜூரமா, நெருப்பா? அனல் வீச்சு பக்கத்தில் அண்டவிடல்லியே! என்னென்னவோ வைத்தியம் பண்ணி னேன். புலிப்பாலையே கொண்டு வந்தேன். என்னத்தைப் பண்ணி என்ன? சாகவே தீர்மானம் பண்ணிவிட்ட வளுக்கு சஞ்சீவி மருந்தைக் கொண்டு வந்துதானென்ன?. அதுவேதான் அவளுக்கு விஷம். அப்படித்தான் நான் அவளுக்கு என்ன தீங்கு இழைத்து விட்டேன்? விடிந்ததும் கூப்பிட்றா பிராம்மணாளை, கொண்டு வாடா மூங்கிலைத்தான்!

முகமாற்றமாய் குழந்தையாவது தங்கிற்றா? எப்படித் தக்கும்? பிறக்கும்போதே பூனைக்குட்டி மாதிரிக் கத்திற்று; தாய்ப்பாலுமில்லை. கொடுக்கவே மறுத்துவிட்டாள். எட்டாம் மாதம் தொட்டில் ஏறாது என்று சும்மாவாச் சொன்னார்கள்?

ப- 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/154&oldid=590812" இலிருந்து மீள்விக்கப்பட்டது