பக்கம்:பச்சைக்கனவு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 0 லா. ச. ராமாமிருதம்

'அவள், என் சென்றுபோன வாழ்க்கையின் அம்சம், நாங்கள் கல்யாணமாகி ஒரு வருஷங் கூடச் சரியாக சேர்ந்து வாழவில்லை. இருந்த வரையில் சதா ஏதாவது நோய், பாதி நாள் அது உடம்பு இது உடம்பு என்று பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாள். கடைசியில் பிரசவக் கோளாறில் இறந்து போனாள். அந்தக் குழந்தையும் தங்கவில்லை. அவள் நினைவே, எனக்கு இரவு கண்டு, காலையில் சொல்ல மறந்து போகும் கனவு போல் இருக் கிறது. அதனால்தான் நான் இதுவரை உன்னிடம் கூடச் சொல்லவில்லை.”

அவன் ஒன்றும் பதில் பேசவில்லை. அவசரமாகச் சொல்லிக் கொண்டே போனான்.

'நான் அவளைப் பற்றிச் சொல்லத்தான் என்ன இருக் கிறது? அவளைப் பற்றித்தான் நாம் பேசுவானேன்? அவள் இறந்த காலம் நமக்கு இப்பொழுது நிகழும் நிமிஷம் இருக் கிறது; நம்முடைய எதிர்காலம், நம்முடைய ராஜ்யம். அவளைப் பற்றி நமக்கென்ன?”

மறுபடி மெளனம் இருவரிடையிலும் திரையிறங்கிற்று.

'எனக்குத் தூக்கம் வருகிறது' என்று சொல்லிக் கொண்டே அவள் நழுவினாள்.

'இதுதானா உன் பதில்?'

'நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? முதல் தாரம் இறந்து மறுதாரம் கொள்வது புதிதா? முதல் தாரம் இருக்கையிலேயே இளையாள் பண்ணிக் கொள்வது. உண்டே'

அவள் பதில் அவனுக்கு நிம்மதியை அளிக்கவில்லை. அவள் போன பிறகு வெகுநேரம் அங்கேயே உலாவினான். மனம் தவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/173&oldid=590831" இலிருந்து மீள்விக்கப்பட்டது