பக்கம்:பச்சைக்கனவு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரட்சி C 165

திடீரென ஒரு பெரும் சீற்றம் அவனைப் பிடித்துக் கொண்டது. கோட்டுப் பையிலிருந்து போட்டோவை எடுத்துச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தான்.

தெருச்சத்தம் ஒய்ந்து விட்டது. விளக்குக் கம்பங்கள், மெனன சாட்சிகள் போல் வரிசையாக நின்றன. எதற்கு?

திடீரென்று மிகவும் புழுக்கமாக இருந்தது. அடேயப்பா! இப்படி வெந்தால், இது மழைக்குத்தான் அறிகுறி.

இப்போது துரங்கியிருப்பாளா? தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு எப்படிப் படுத்துக் கொண்டிருப்பாள்? தன்னந்தனியாக, அநாதை மாதிரி; இருளில் தட்டித் தடவிக் கொண்டு படுக்கையறையுள் சென்றான்.

மெதுவாகப் பெயரைக் கூப்பிட்டு அவளைத் தொட்டான். 'ஒ, நீங்களா? அவள் குரலில் துளிக் கூடத் துTக்கமில்லை. அவள் கைகள் அவன் கழுத்தைக் கட்டியனைத்தன. துக்கம் தொண்டையை அடைத்தது. ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்? அன்பு இருக்கிறது. ஒருவரை ஒருவர் நம்பியிருக்கிறோம். ஆனால் ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் இருக்க முடிய வில்லை. இப்படி உடலோடு உடல் குழைந்தும் உள்ளத்துக்கு உள்ளம் ஏன் தொடக் கூட முடியாது தவிக்கிறோம்?

திடீரெனப் புழுதிக் காற்று கிளம்பி இன்னல் கதவுகள் படபடவென அடித்துக் கொண்டன; காற்றில் மண் வாசனை, கூடத்திலிருந்து குப்பை பறந்து வந்து முகத்தில் மோதியது ஜன்னலுக்கு வெளியே மின்னல் படபடத்தது, எங்கேயோ மழை பெய்கிறது. எங்கிருந்து வந்து கொண் டிருக்கிறது? -

அவள் முகத்தைப் பார்க்க வேண்டும்; அடக்க முடியாத அவா அவனைத் தூண்டிற்று, மேஜையண்டை போய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/174&oldid=590832" இலிருந்து மீள்விக்கப்பட்டது