பக்கம்:பச்சைக்கனவு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசும் விரல் C 47

வளையல் கொத்தையும் பெட்டியையும் இறக்குகையில் கண்கள் அவள்மேல் திருட்டு வெள்ளோட்டம் விட்டன. அவுனு அவளேதான். உறையிலிட்ட கத்திபோல் புடவை புள் உடலின் விறுவிறுப்பும் மார்மேல் படர்ந்த மெல்லிய மேலாக்கடியில் தெரிந்த ரவிக்கை முடிச்சும்......

p 2 ”

'ஈ மோஸ்தரு மீகு இஷ்டமா ஒரு ஜோடி பொறுக்கி அவள் முகத்துக்கெதிரே ஆட்டினான். கை பதறிற்று.

ஆசை மிகுதியில் அவள் கண்கள் விரிந்து வளையல் மேல் கவ்வின.

'நல்லாத்தான் இருக்குது. துட்டு இல்லியே!” ஆகாய நீலவர்ண வங்கி. நீலத்தின் நடுவில் ஒரு இழை பொன் ஊடுருவி, மேலே இலைகளின் சந்து வழி வெய்யிவின் ரேகைகளை வாங்கிக்கொண்டு விட்டுவிட்டு மின்னிற்று. புரிந்தும் புரியாது, ஜாடையும் பேச்சாய் பேரம் முடிந்து, அடுக்க ஆரம்பித்தான். விரல்கள் அடுக்கிக் கொண்டே, கண்கள் இமையாது அவளைப் பருகின.

அவன் விரல்கள் ஜாலம் நிறைந்த விரல்கள். விரலுக்கு விரல் தனித்தனி உயிர்கொண்டு, வாய் வார்த்தையிலும் அர்த்தம் நிறைந்த விரல்கள். மிருதுவாய், நீண்டு, நுனி சிறுத்து, நயமும் நுட்பமும் நலுங்கும் விரல்கள் அவள் கைமேல் வளைந்து, சுருண்டு, பதுங்கி, கொஞ்சி, நெகிழ்த்தி வளையலை வெகு லாகவமாய் செலுத்தின. குவிந்த விரல்களின் சாய்ந்த மேடு ஏறி விரல் குமிழ்களைத் தாண்டுகையில் பொட்டென்று வளையல் உடைந்தது. தானாவோ, அவனாவோ அவனுக்குத்தான் தெரியும். இரு கண்ணாடித் துண்டுகள் தெறித்துத் தரையில் விழுந்தன.

'த்லோத்ஸோ' அந்த முகச்சுளிப்பில்கூட ஒரு அலரிக் குறுகுறுப்பு. மின் நேரத்தில் உதடுகள் முறுக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/56&oldid=590714" இலிருந்து மீள்விக்கப்பட்டது