பக்கம்:பச்சைக்கனவு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 o லா. ச. ராமாமிருதம்

அப்படி நான் ஒரு சபதமே பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

படிப்போ பாட்டோ புருஷனோ எதுவுமே, ஆம்

'நானும் அதையேதான் சொல்கிறேன். உங்கள் பெண்

மேல் இருக்கும் பாசம் உங்கள் கண்ணை மறைக்கமுடியும்.”

அப்பா பதிலுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதுதான் சமயமென நான் இடை மறித்தேன். ஆமாம், இவரை எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க அழைத்து வந்தீர்களா? அல்லது செளகரியமாய்ச் சண்டைபோடக் கூட்டி வந்தீர்களா?”

'அப்போது நீங்கள் என்பக்கம் திரும்பித் தலை வணங் கினிர்கள். மறுபடியும் நான் சிலை அசையக் கண்டேன். எனக்கு நெஞ்சு பரபரத்தது. எப்படியும் நீங்கள் ஆச்சரிய மான நிமிஷங்கள் படைத்தவர்.'

'தாrாயணி, நாம் இப்போது நிமிஷத்தின் சிமிழி லிருந்து மையை எடுத்து இட்டுக்கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.'

அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. நெஞ்சை அடைத்தது. அவன் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டாள். வார்த்தைகள் மூச்சோடு சேர்ந்து வந்தன. “எப்படி உங்களால் இப்படிப் பேச முடிகிறது?’’

அவன் பெருமூச்செறிந்தான். இருவரும் மெளன. மாயினர்.

ஆகாயத்தில் பட்சி ஒன்று ஒற்றையாய்ப் பறந்து சென்றது. திசை தப்பிய எண்ணம்போல், நிலவு வெளிச்சத்தில் இரவைத்தான் பகலென்று நினைத்துக் கொண்டதோ? மாலையில் நேரத்தில் கூட்டிலடைய மறந்து இப்பொழுது இரவில் திசை தப்பி அலைகிறதோ? சுருதியிலிருந்து இழைகள் பிரிந்து அவர்களைச் சுற்றியும் மேலும்; மேன்மேலும் கூடு பின்னின.

"ரிமா மமாமமாமரம-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/85&oldid=590743" இலிருந்து மீள்விக்கப்பட்டது