பக்கம்:பஞ்சதந்திரக் கதை.djvu/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்‌

பிரியமுள்ள நல்லுணர்ச்சிப்‌ பொருட்களைக்‌ கொண்டு சிறுவர்களைப்‌ படிப்பித்தலே நிமாயம்‌. எனெனிற்‌ கற்கிற பொருளின்மேல்‌ விருப்பமிருக்கிற்‌ படிப்பதிகசீக்கிர மேறு மென்பதற்‌ கையமில்லை. ஆதலாற்‌ பிள்ளைகளுக்குப்‌ பிரியப்‌படத்தக்க பலகதைகள்‌ கூடிய பஞ்சதந்திரக்கதையைப்‌ பள்விக்கூடங்களிலே மேன்மேலும்‌ வழங்குவிக்கக்‌ கருதினோம்‌.

ஆயினும்‌ அந்‌நூலைப்‌ பரிசோதித்துப்‌ பார்‌க்கிறபோது வெளிப்பட்ட அதின்‌ நானாவித பிரதிகளில்‌ பல பிழைகளோடே அநேகந்‌ துர்ப்‌போதனைகளுங்‌ கலந்து வழங்குகறதை விசனத்தோடே கண்டோம்‌. அவைக ளென்னவெனில்‌ தான்‌ நினைக்குங்‌ கருமங்களை நிறைவேற்றவுந் தன்‌ சத்துராதிகளை யழித்து நிர்மூலமாக்கவும் பொய்‌, சூது, வஞ்சனை, கள்ளஞானம், கள்‌ளப்பத்திரம்‌,கொலை முதலிய தகாத வுபாயதந்திரங்களேயாம்‌. அதற்‌ குதாரணமேதெனில்‌ இஃது தவிர மற்றப்பிரதிகளில்‌ மித்திரபேத தந்திரக்கதையின்‌ கடைசியிலே தமனகன்‌ சொல்றதுறதாவது; "சத்துருவைக்‌ கொல்லவேணுமென்‌-