பக்கம்:பஞ்சதந்திரக் கதை.djvu/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

று சாஸ்திர மிருக்கிறது. தாயானாலும்‌ பந்துவானாலும்‌ புத்திரனானாலு மித்திர னானாலு மிவர்‌களில்‌ யார் தன்னைக கொல்லப்‌ பிரவர்‌த்திக்கிறானோ வவனை ராசா கொல்லவேண்டும்‌. எனென்றால்‌ தயையுள்ள சாசனும்‌ எல்லாம்‌ பக்ஷிக்கிற பிராமணனுஞ்‌ சுதந்தரமாயிருக்கிற பெண்‌சாதியுந்‌ துஷ்டசிநேகிதனும்‌ விபரீத சேவகனும்‌ அசாக்கிரதையான மந்திரியும்‌ நன்றியறியாதவனு மிருக்கலாகாது. மேலும்‌ மெய்‌,பொய்‌, கடுமை, மென்மை, கொலை, தயை, உதாரத்துவம்‌, உலோபத்துவம்‌,பலவழியாகத்திரவியஞ்சம்‌ பாதித்தல்‌, வெகுபெயருடைய சிநேகித மிப்படிப்பட்ட பலகுணங்கள்‌ வேசியைப்போ லிசாசாவுக்‌ இருக்கவேண்டுமென்று ராசநீதி யிலிருக்கின்றன,, என்பதாம்‌.

அப்படிப்பட்ட துர்நடத்தைக ளிராசாவுக்கு நீதி நியாயமாகில்‌, கொஞ்சத்துக்குள்ளே பிரபுக்களுந்‌ துரைகளும் பிரசைகளு மப்படிக் கொத்த கெட்டபோதனைகளையுந் துர்மாதிரிகைகளையு மநுசரிப்பார்கள்‌. அதனா லலோகமெல்லாங்‌ கெட்டுப்போகிறதற்‌ கிடமாமே. அந்தத்‌ துர்ப்போதகங்களை யநுசரித்ததினா லநெகர்‌ குணங்கெட்டுச்‌ சூது,களவு,வஞ்சனை,அநியாயம், கொலைமுதலிய பாதகங்களைச்‌ செய்து நீதிக்‌ கர்த்தாக்களின்‌ கையிலகப்பட்டுத்‌ தீராத துன்பத்துக்‌ குள்ளானார்க ளென்கிறதற்குச்‌ சந்‌தேகமில்லை.